Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காமன்வெல்த் : இனப்படுகொலை அரசிற்கு அவுஸ்திரேலியாவும் ஆதரவு

kangarooஇலங்கை அரசிற்கு ஆதரவாக அமரிக்கா ஐரோப்பிய நாடுகளும் இந்தியா போன்ற நாடுகளும் நகர்வுகளை மேற்கொள்ளும் போது அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் அபிப்பிராயம் திரும்பிவிடாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு தமிழ் அடியாள் அமைப்புக்கள் செயற்படுகின்றன. முப்பவது வருடங்களுக்கி மேலாக ஏகாதிபத்திய ஆதரவுப் பிழைப்பு நடத்தும் இந்த அமைப்புக்களின் வேடம் பொதுநலவாய நாடுகளின் விடையத்கிலும் கலைந்துபோனது. இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடப்பதை பிரித்தானியா, அவுஸ்திரேலியா உட்பட தமது எஜமான நாடுகள் எதிர்ப்பதாக பிரச்சாரம் செய்துவந்த புலம்பெயர் இணைய ஊடகங்கள் இதே நாடுகள் மாநாட்டை இலங்கை நடத்துவதாகத் தீர்மானித்த போது மௌனமாகிவிட்டன. இன்று அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சரும் மாநாட்டில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும் என அறிவித்துள்ளார்.
திட்டமிட்டவாறு அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் இடம்பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அமர்வுகளை புறக்கணிப்பது பாதகமான விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version