Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காந்திக்கு தேசத்தந்தை பட்டம் கிடையாது : இந்திய அரசு

காந்திக்கு ‘தேசத் தந்தை’ என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார். அதில் காந்திக்கு தேசத் தந்தை என்று பட்டம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காந்தி தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார், இது தொடர்பாக மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம்,
காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

Exit mobile version