வினோதா போலிசில் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரம்:
“என் கணவர் இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். நான் இந்து படையாச்சி சமூகத்தைச் சேர்ந்தவள். நாங்கள் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள். எனது கணவரை விட்டு பிரிந்து வராவிட்டால் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ரவுடி முருகன், எனது மாமா கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவமணி ஆகியோர் எனது கணவரின் குடும்பத்தாரைச் சந்தித்து மிரட்டியுள்ளனர்.
எங்கள் ஜாதி பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் சேத்தியாதோப்பு பகுதியில் நடந்தது போல உங்களை கொலை செய்து விடுவோம். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இதற்கான உத்தரவை போட்டுள்ளார் என்று கூறி 10-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் எனது கணவரின் உறவினர்களை மிரட்டி வருகிறது.
மேற்கண்ட நபர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கேட்டுக்கொண்டு தனது திருமணச் சான்றையும் மனுவுடன் வினோதா இணைத்துள்ளார்.