Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காணாமல் போனோர் அனைவரையும் அழித்துவிட்டோம் : வன்னி தளபதி

Ponispas pereraஇலங்கையில் பேரினவாத கிரிமினல் ராஜபக்ச அரசு கடத்தி கைதுசெய்தோரையும், வன்னி இனப்படுகொலையின் போது சரணந்தோரையும் கொன்று அழித்துவிட்டது என்பதை வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். சொந்த மக்கள் எங்கு என்பதை கொலை வெறியோடு தெரிவித்திருக்கும் ராஜபக்ச குடும்ப அரசின் தளபதியின் அறிவித்தலின் பின்னணியில் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. மக்களின் அவலங்களை அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தும் புலம்பெயர் மேட்டுக்குடிகளும் இலங்கை இராணுவ பாசிச அரசும் மக்கள் போராட்டங்களை அழித்துத் துவம்சம் செய்வதில் முன்னணியில் நிற்கின்றன.
வன்னியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக கூறி அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிராக சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டங்களை ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை செய்வதால் எந்தவிதமான பயனும் இல்லை. காணாமல் போனவர்கள் என்று எவரும் சிறைச்சாலைகளிலோ புனர்வாழ்வு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டு இருக்கவில்லை நான் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற ரீதியில் தெரிவிக்கின்றேன்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் காலத்தில் முல்லைத்தீவில் நடைபெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் 1300 மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள் அவர்கள் இன்றுவரையும் திரும்பி வரவில்லை. அவர்களுடைய உறவுகளும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தனர். ஆனாலும் ஒரு வருடம் கடந்தும் அவர்கள் வராமையினால் அவர்களுக்கான இறப்பு சான்றிதழ் அவர்களுடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. என்றார்
.

Exit mobile version