Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காணாமல் போனவர்கள் பற்றி ஆதாரம் இல்லை என்கிறது ஆணைக்குழு

vibooshikaயுத்தத்தில் காணாமல்போன சில மக்கள் பற்றி எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா இதுகுறித்து குறிப்பிடுகையில்,
சில முறைப்பாடுகளை விசாரணை செய்யும்போது, அந்நபர்கள் எங்கே, எப்படி காணாமல்போனார்கள் என்பது குறித்த எந்த வித தகவலும் கிடைக்கவிலை. இது பாரிய பிரச்சினையாக உள்ளது. எனினும், அம்முறைப்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் விசாரணை செய்து வருகின்றோம்.

காணாமல்போன நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் இறப்பு சான்றிதழை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களை பற்றிய ஆதாரங்கள் குறைவாக இருந்தபோதிலும் ஆணைக்குழு அவர்களைக் கண்டுபிடிக்கும் என மக்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடத்திய விசாரணையில், மக்கள் நல்ல மன நிலையில் இல்லை எனவும், சில குடும்பங்களில் 9-10 நபர்கள் காணாமல் போனதால் அக்குடும்ப உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் கலந்துரையாடியதை அடுத்து, குடும்ப மக்களுக்கு ஆலோசனை முகாம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அப்பவிகளையும் சரணடையக் கோரிய போராளிகளைம், குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் உறுப்பினர்களையும் குடும்பங்கள் தேடி வருகின்றம. ஆணைக்குழுவோ அவர்கள் குறித்த தகவல்கள் இல்லை என்கிறது.

Exit mobile version