காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும்’நாம் இலங்கையர் அமைப்பினால்” நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது. இதன் போது குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டதாகவும், திடீர் என நான்கு புறங்களிலும் இருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் கற்கள், முட்டை, தக்காளி ஆகியவற்றால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.