வான்வெளில் வானரங்கள் வட்டமிடும்
வன்னிமண்ணை தின்று தீர்க்கத் திட்டமிடும்
வடக்கிலிருந்து வானமளக்க அனுமார் படை
வைதேகி மாவியாவுக்கு இந்தியாவில் கொடி குடை
கிழக்கிலிருந்து கொண்டு வந்து கொட்டினர் சீனவெடி
பங்கர் கிடங்குகளுள் அழிந்தனர் எங்கள் தமிழ்குடி.
பசியெடுக்கும் பாக்கிஸ்தானில்
படியளக்க யாருமில்லை
தமிழர் உயிர் உண்ண உதவுகிறார்கள்
இதற்கொன்றும் குறைவில்லை.
உயிர்கொழுத்தி உள்ளம் எரிய
ஆற்றாய் வடித்த வன்னியின் கண்ணீர்
சிந்து நதியாய் கரையுடைத்தது.
நடை படித்தது
உயிரெடுத்தது.
தாகத்துக்குக் குடித்த நீரே
உயிர் குடித்தது.
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இயற்கை அன்றே கொல்லும்.
இலங்கையில் அள்ளிய பாவப்பணம்
பாக்கிய ஏழைகளை எட்வேயில்லை
வெள்ளம் கொண்டு போனது கொள்ளை
எங்கள் உடல்களில் ஓடிய உதிரம்
சீனாவில் வெள்ளமாய் கரை உடைப்பு
சீனப்பெருஞ்சுவர் கற்களின் மேலே
பொதுவுடமைத் தத்துவங்கள் தலை உடைப்பு
பொருளாதார வெள்ளம் சீனாவில் பாயும்
பொதுமக்கள் வாழவே உணர்வின்றி ஓயும்.
மஞ்சக்கடலே மாறும் சிவப்பாய்
வன்னிமக்களின் சாபக் கொடுப்பாய்.
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
இயற்கை அன்றே கொல்லும்.
இராவணன் தேடிப்போன சீதை
இந்தியப் பெண்மணி இல்லை என்பதை
கறுப்புக் கண்ணாடி காட்டுவதில்லை
மாரீசன் மாமாக்களின்
உணவுண்ட உண்ணாவிரதங்களால்
உண்ணாநோன்பே உயிரின்றிப் போனது.
காந்தியின் பெயர்களால்
காந்தியின் சாந்தியும் புதையுண்டு போனது.
இராவண வதம் என நடந்த
வன்னிவதை ஐரோப்பாவுக்குக் கேட்டாலும்
அயோத்திக்குக் கேட்காது
சுக்கிரீவன் அரசுக்குமா கேட்காது?
எங்கள் மண்ணில் ஏறிய கைகளை
கூரிய வாள்கள் கிழித்த போதும்
சீறிய தமிழர்கள் சிவந்தபோதும்
இந்தியச் சகோதரம் இழித்தது
உறவுகளை எறிந்து கிழித்தது.
திராவிடம் திண்டு திமிர்த்தது.
தமிழைச் சொல்லிப் பழித்தது.
பங்கர்களுக்குள் இருந்த வன்னிப் குழந்தைகள்
பெற்றோரைத் தேடிப் பசியோடு எழுந்தனர்
உதிரம் உறைந்த உடல்களோடு
நீட்டிய கைகளில் நீளத்தாவினர்
காட்டிய தோழ்களில் சாயத்தொடங்கினர்
கேட்பதற்கு எவரும் இல்லை
கொடுப்பதற்கும் ஏதுமில்லை- இனி
எதிரி என்று எவரும் இல்லை
துரோகிகளே எதிரியுடன் கைகோர்த்தபோது
நாம் காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம்
எதிரிகள் என்பது எமக்கு இனி இல்லை
எங்களை எவரும் தேடவும் வேண்டாம்
முதுகில் ஏறிக் குத்தவும் வேண்டாம்.
திராவிடம் காட்டித் தலைநிமிர்ந்த தலைவா
உன்தலைபோகு முன்னரே
தமிழ் போய்விட்டு போ
இந்தியத் தமிழர் எட்டித் துப்பினால்
இலங்கை ஒருதரம் சனிநீராடும்
துப்பக் கூட துப்பில்லாமல்
போனதே துப்புக் கெட்ட தமிழினம்
நாம் காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம்
எதிரிகள் என்பது இனி எமக்கு இல்லை
எங்களை எவரும் தேடவும் வேண்டாம்
முதுகில் ஏறிக் குத்தவும் வேண்டாம்.
வறுமையில் வாழ்ந்து வளர்ந்த
அப்பு அப்துல் கலாம் காலநிதியும்.
கனவு காண் என்று அன்றே சொன்னார்
நிஜமாக எதுவுமே கிடைக்காது என்பதாலா?
அப்பு கண்ட கனவு கூட
இறுதியில் இந்தியாவில் இராச்சத இரக்கட்டு
பேரழிவுச் சிகரெட்டு.
வாடிய வயிறு வதைபட்டிருக்க
சிறுகுடலைப் பெருங்குடல் தின்று தீர்க்க
சோறுதானே ஐயா கனவிலும் வருகிறது.
வறுமையில் வளர்ந்த
தமிழ் விஞ்ஞானி கூட
ஏறிய ஏழை ஏணிகளை
ஏற்றவே இல்லையே.
ஏழையின் வாழ்க்கையே கனவுகளின் தொல்லையே.
நாம் காட்டிய தோழ்களில் சாய்ந்து கொள்கிறோம்
எதிரிகள் என்பது இனி எமக்கு இல்லை
எங்களை எவரும் தேடவும் வேண்டாம்
முதுகில் ஏறிக் குத்தவும் வேண்டாம்.
தோழ்கள் தேடும்
நோர்வே நக்கீரா