Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காட்டிக்கொடுத்த தமிழ் அமைப்பு: பில் மில்லரின் நூல் வெளியீட்டில் சம்பவம்

war-crimeகிளாஸ்கோவில் இன்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விளையாட்டுப் போட்டியில் தலைமை தாங்குவதற்காக இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வருகிறார். அதனை ஒட்டி ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதே வேளை நேற்று 23.07.2014 அன்று கிளாஸ்கோவில் பில் மில்லரின் ஆவண வெளியீட்டு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. தமிழர்கள் மீதான பிரித்தானியாவின் அழுக்கான போர் என்ற தலையங்கமிடப்பட்ட ஆவணத்தை வெளியிட்ட பில் மில்லர் பிரித்தானிய அரசு எ 1979 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரைக்கும் தமிழர்களின் போராட்டங்களை அழிப்பதற்கு எவ்வாறு செயற்பட்டது என்ற மேலதிக தகவல்களை மேலதிக தகவல்களை உரையாக முன்வைத்தார்.

பில் மில்லரைத் தொடர்ந்து உரையாற்றிய ஜே.டி.எஸ் அமைப்பைச் சேர்ந்த பாஷண இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கும் இனப்படுகொலைக்கும் எவ்வாறு ஏகாதிபத்திய நாடுகள் துணை போகின்றன என விரிவாகப் பேசினார்.

ஏகாதிபத்தியங்களும், பிரித்தானிய அரசும் எவ்வாறு தொடர்ச்சியான இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டன என ஆதாரபூர்வமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியின் இடையே புகுந்த ஸ்கொட்லண்ட் யார்ட் உளவுத்துறையினர் அங்கு பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்தனர். அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர்கள் தமிழ் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பது  அதிர்வலைகளை ஏற்படுத்திற்று.

தமிழ்ப் பேசும் மக்களுக்காக அவர்களை அழிக்கும் அரசுகளைப் பற்றிய கருத்துரைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை உளவுத்துறையினரை அழைத்து வந்து வரவேற்ப்றையிலிருந்தவரிடம் உளவுத்துறையினர் என அறிமுகம் செய்து காட்டிக்கொடுக்கும் வேலையைச் மேற்கொண்ட தமிழ் அமைப்பின் அவமானகரமான செயல் கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழ் மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் வியாபாரப் பண்டமாக்கிய இவர்கள் தமிழ் மக்களின் அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

ஒரு புறத்தில் தமிழ் மக்களுக்காகப் போராட்டங்களை நடத்துவதாகக் கூறும் இவர்கள் மறுபக்கத்தில் அவர்களை ஏகபோக அரசுகளுக்குக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

Exit mobile version