28.12.2008.
பாலஸ்தீனத்தின் காசா நகரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு சரமாரியாக கொடூர குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தின. இதில்இருநூறு பேருக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் குழந்தைகளும் அடங்குவர். 250-க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பாலஸ்தீனத்தின் காசா திட்டுப் பகுதியை தனது நீண்ட கால கொலைக் களமாக இஸ்ரேல் மாற்றி வருகிறது. தொடர்ந்து இப்பகுதி மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், கடந்த ஒரு வார காலமாகவே, இங்குள்ள ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை அழித்து ஒழிக்கப் போவதாகக் கூறி மிரட்டி வந்தது.
பாலஸ்தீனத்தில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றிய ஹமாஸ் இயக்கத்தை அங்கீகரிக்காத இஸ்ரேல், காசா பகுதியில் செல்வாக்குடன் திகழும் ஹமாஸ் இயக்கத்தினரோடு தொடர்ந்து மோதி வருகிறது. இதனால் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹமாஸ் இயக்கத்தவரை அழிக்கப் போவதாகக் கூறி, மிரட்டி வந்த இஸ்ரேல், திடீரென்று சனிக்கிழமை எவ்வித முன்னறிவிப்புமின்றி காசா நகரத்தின் மீதும், சுற்றியுள்ள பகுதிகள் மீதும் சர மாரியாக குண்டுமழை பொழிந்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. முன்னெப்போதும் இப்படிப்பட்ட தொடர் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது இல்லை என்று பாலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதிகளிலும், குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சாலைகள் மற்றும் பள்ளிகள் உள்ள பகுதிகளிலும் குண்டு களை வீசித் தாக்கிய இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலகங்களை குறி வைத்து குண்டு வீச்சு நடத்தியது. இதனால் காசா முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. நகரம் முழு வதும் பெரும் புகை மண்டலம் எழுந்தது.
கிட்டத்தட்ட நாற்பது இடங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் போர் விமானங்கள், “வெற்றிகரமாக”, எதிரிகளை அழித்து விட்டன என்று இஸ்ரேலிய ராணுவ ரேடியோ கொக்கரித்துள்ளது. ஆனால் பலியானவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது. குழந்தைகளையும், உறவினர் களையும் பறிகொடுத்த பாலஸ்தீன மக்கள் கதறி அழுதனர்.
57 வயதான சதி மஸ்ரி என்பவர், எனது மகனை சிகரெட் வாங்க கடைக்கு அனுப்பினேன், அந்த சில நிமிடங்களில் இஸ்ரே லிய குண்டுவீச்சுக்கு இந்தப் பகுதி முழுவ துமே இரையாகிவிட்டது. சிகரெட்டை பொசுக்குவது போல, இஸ்ரேலிய போர் விமானங்கள் எனது மகனை பொசுக்கி விட்டன என்று கதறி அழுதார்.
காசா நகர மருத்துவமனைகளில் ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
முகமது அப்பாஸ் கண்டனம்
இஸ்ரேலின் இந்தக் கொடூரத் தாக்கு தலை பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப் பாஸ் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை அனுமதிக்க முடி யாது என்று கூறியுள்ளார்.