Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காசா போர் பெரும் தோல்வி: இஸ்ரேல் ஒப்புதல்.

14.03.2009.

காசாவில் ஹமாஸ் அரசை எதிர்த்து நடந்த பெரும் போரில் தோல்வி ஏற்பட்டுள்ளதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் ஹமாஸ் பிரிவினரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களது ஆட்சியை முடக்குவதற்கு இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ராக்கெட்டுக்களை ஏவியது. இந்தத் தாக்குதலில் ஹமாஸ் படை பிரிவினர் பெரும் சேதம் அடைந்ததை விட அப் பாவி பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் மீது நடந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தோல்வியையே சந்தித்தது. காசா போர் தோல்வியே என இஸ்ரேலில் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர். காசா போரால் பெரும் வலியும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. காசாவுக்கு ஆயுதம் கடத்தப்படுவதை இஸ்ரேலால் தடுக்க முடியவில்லை. ஹமாஸ் பிரிவையும் பலவீ னப்படுத்த முடியவில்லை.

இஸ்ரேல் பாதுகாப்புப்படை வீரர் கிலாட் ஷாலித் போரின் போது கடத்தப்பட்டார். அவரை இஸ்ரேல் அரசால் இது வரை விடுவிக்க முடியவில்லை. இத்தகைய உண்மைகள் மறுக்க முடியாதவைகளாக உள்ளன.

காசா போருக்கு பெரும் விலையை இஸ்ரேல் தந்துள்ளது. போரால் இஸ்ரேல் அரசை காசா பகுதி மக்கள் பெரிதும் வெறுக்க துவங்கியுள்ளனர். உலகத்தின் பார்வையில் இஸ்ரேல் மோச மானவர்களாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நடவடிக்கையால் அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளையும், பார்வையாளர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அன்காராவில் இஸ்ரேல் கூடைபந்து அணி போட்டியில் நடந்த மோதல், மால்மோவில் இஸ்ரேல் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணியுடன் ஸ்வீடன் மோதிய போட்டியில் பார் வையாளர்கள் தடை ஆகியவற்றை இதற்கு கூறலாம்.

Exit mobile version