அமெரிக்க அரசும் அதன் அணிகளும் உலகைப் போர்க்களமாக மாற்றிவருகின்றன. உலகின் மூலைகளிலெல்லாம் மூக்கை நுளைத்து மனிதர்களை இறைச்சியும் சதையுமாக ஓட ஒட விரட்டியடிக்கின்றன அமெரிக்காவின் தலைமையிலான நாடுகள். இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அமெரிக்கா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகள் நிறைவேற்றிய நாளிலிருந்து உலகம் முழுவதும் மரண ஓலங்கள் கேட்டவண்ணமுள்ளன. நாளை எங்கும் எப்படியும் நடக்கலாம்.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் நினைத்தால் துப்பாக்கிக் கருவிகள் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலும் முளைத்து நிற்கும்.
மக்களை மதவெறி, நிறவெறி, இனவெறி போன்றவற்றுள் அமிழ்த்தி நச்சூட்டும் அரசுகளின் கோரத்தாண்டவங்களுக்குப் பின்புலத்தில் ஏகபோக அரசுகளே காணப்படுகின்றன. இந்த நச்சூடலையும் மீறி
இதையெல்லாம் கடந்து இஸ்ரேலின் எல்லைக்குள்ளேயே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், கொலை வெறியையும் எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 26.12.2014 அன்று இஸ்ரேலிய மக்களின் ஒரு பகுதியினர் தமது அரசின் கொலையை நிறுத்துமாறு போராடினர். ‘யூதர்களும் அரேபியர்களும் எதிரிகள் அல்ல’, ‘படுகொலைகளை நிறுத்துங்கள்’ ‘கொலைகளைத் தூண்டும் அரசு எங்களுக்கு வேண்டாம்’ என்றெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
வெள்ளியன்று, வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள உம் அல்-ஃபாஹ்ம் (Umm al-Fahm) நகரில் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஹைய்பாவிற்கு அருகில் உள்ள ஒரு இஸ்ரேலிய-அரபு நகரமான இஃபுரிடிஸில் குண்டுவீச்சுக்கு எதிராக 1,000 பேர் மற்றொரு பேரணி நடந்தினார்கள். Israel Hayom பத்திரிகை செய்தியின்படி, பல ஆர்ப்பாட்டக்காரர்கள், “இங்கே அரபு நாடுகளின் மனசாட்சி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது, அவை காசாவாசிகளின் துன்பங்களை நிறுத்த ஒன்றுமே செய்யவில்லை,” என்று எழுதப்பட்ட சுலோகங்களோடு சவப்பெட்டிகளைச் சுமந்து சென்றார்கள்.
இனவெறியை மையமாகவைத்துப் பிழைப்ப்ய் நடத்தும் இஸ்ரேலிய அரசு மட்டுமல்ல அரேபிய வியாபாரிகளும் இச்செய்தியப் புறக்கணித்தன.