Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு 4 நாளில் 400 பேர் பலி ; இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா.

02.01.2008.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்தி வரும் கொடூர குண்டுவீச்சு தாக்கு தலை நிறுத்திக்கொள்ள முடியாது என்று இஸ்ரேல் ஆணவத்துடன் கூறி யுள்ளது.

கடந்த நான்கு நாட் களாக காசா நகரில் இஸ் ரேல் நடத்தி வரும் தாக்கு தலில் சுமார் 400 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல் லப்பட்டுள்ளனர். 1600 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர் களுக்கு பதிலடி கொடுக் கிறோம் என்ற பெயரில், அந்நகரம் முழுவதையும் சுற்றி வளைத்து இஸ்ரேலிய போர் விமானங்களும், டாங்குகளும் சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. காசா நகரில் பல முக்கிய கட்டடங்களை தரைமட்டமாக்கியுள்ள இஸ்ரேலிய போர் விமானங் கள், அந்நகரில் அமைந் துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தி யுள்ளன.

கடந்த ஒரு மாத கால மாகவே காசாவை முற்று கையிட்டுள்ள இஸ்ரேலிய படைகள், அப்பகுதி மக்க ளுக்கு செல்ல வேண்டிய உணவு, மருந்து, எரி பொருள் மற்றும் அத்தியா வசியப் பொருட்களை தடுத்து நிறுத்தியுள்ளன. தொடர்ச்சியாக எரி பொருள் செல்ல அனுமதிக் கப்படாததால் கடந்த நவம்பர் 13ம்தேதி முதலே காசாவில் உள்ள ஒரே ஒரு மின்நிலையம் மூடபட் டுள்ளது.

எனவே அந்நகரமே இருளில் மூழ்கியுள்ளது. மின் சப்ளை இல்லாததால் ரொட்டிக்கடைகள் செயல் பட முடியவில்லை. இத னால் உணவு பற்றாக்குறை கடுமையாகியுள்ளது. அது மட்டுமின்றி, காசா நகரத் தில் உள்ள சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு ஐ.நா. சபை நிவாரண அமைப் பிடமிருந்து வந்து கொண் டிருந்த உணவுப்பொருட் களையும் இஸ்ரேல் படை கள் பலவந்தமாக தடுத்து நிறுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட கொடிய சூழலை உருவாக்கி விட்டு, காசா நகர பாலஸ் தீன மக்களை இருளில் தள் ளிய பின்னர், இஸ்ரேலிய படைகள் தங்களது மனிதத் தன்மையற்ற தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

இஸ்ரேல் பிரதமரின் வெறி

இந்நிலையில் காசா நகர மக்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறும் அதற்காக உடனடியாக இரண்டு நாட்கள் தாக்கு தலை நிறுத்துமாறும் பிரான்ஸ் அரசு விடுத்த கோரிக்கை யை இஸ்ரேலிய பிரதமர் எகுத் ஹோல் மெர்ட் நிராகரித்துள்ளார். சர்வதேச அளவில் கண் காணிப்பாளர்களை நிறுத் தாமல், சண்டை நிறுத்தம் அறிவிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 4 நாட்களில் மட்டும் காசா நகரத்தின் மீது 500 முறை இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமை யாக தாக்குதல் நடத்தியுள் ளன. இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர்கள் நூற்றுக் கும் மேற்பட்ட முறை, காசாவில் நேரடியாக இறங்கி குண்டுகளை வீசி யுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்களில் ஏராள மான குழந்தைகளும் அடங்குவர்.

அமெரிக்காவின் அநாகரீகம்

இந்நிலையில் காசா மீதான தாக்குதலை உடனடி யாக நிறுத்துமாறு இஸ் ரேலை வலியுறுத்தும் தீர் மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அரபு நாடுகள் சார்பில் லிபியா கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை தென்னாப்பிரிக்கா, இந் தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. எனி னும் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஆதரவு நாடு களே அதிகம் உள்ளதால் இத்தீர்மானம் தோல்வி யடைந்தது.

அதுமட்டுமின்றி, இந் நிகழ்வின்போது பேசிய அமெரிக்க தூதர் ஜல்மாய் கலீல் ஜாத், காசா மீது இஸ் ரேல் இப்படியொரு கொடூர தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாக கூட தனது பேச்சில் குறிப்பிட வில்லை. மாறாக, இஸ் ரேலின் தெற்குப்பகுதியில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி சேதம் ஏற்படுத்திவிட்டனர் என்று கூறி மிகக்கடுமை யாக பேசினார்.

லிபியா கொண்டு வந்த தீர்மானத்தில், உடனடியாக காசாவில் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும், அப் பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version