Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் போர்க்குற்றங்களின் பட்டியல்

gazaகாசா மீது நடைபெற்றுக்கொண்டிருக்கும்  இனப்படுகொலைத் தாக்குதல்களில் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் சில:

-வடக்கு காசாவின், ஜபாலியாவில் ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது, அதில் ஒரு செவிலியர் மற்றும் மூன்று ஊனமுற்றோர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் அந்த குண்டு வெடிப்பில் கடுமையாக தீக்காயங்களுக்கு உள்ளானார்கள். பெய்ட் லாஹியாவில் ஊனமுற்றவர்களின் வசிப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டார்கள், நான்கு பேர் காயமடைந்தார்கள்.

-ஒரு உணவுவிடுதியில் உலக கோப்பை அரையிறுதி கால் பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எட்டு பாலஸ்தீனியர்கள் ஒரு இஸ்ரேலிய விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அந்த உணவுவிடுதி, குறிப்பாக முஸ்லீம்கள் பகல் முழுதும் நோன்பிருந்து இருட்டிய பின்னர் சாப்பிடும் ரம்ழானின் போது, மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள் ஒன்று கூடுவதற்குரிய இடமாக நன்கறியப்பட்டதாகும்.

-பெய்ட் ஹனோனில் ஹமாத் குடும்பத்தின் ஐந்து அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் 8 முதல் 13 வயது வரையிலான ஆறு குழந்தைகள் உட்பட காவாரா குடும்பத்தின் எட்டு அங்கத்தவர்களைக் .காசா நகரின் எல் வாஃபா மறுவாழ்வு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பாஸ்மான் அலாஷி கொடுத்த தகவலின்படி, வெள்ளியன்று தனித்தனியாக ஐந்து முறை அந்த மருத்துவமனையை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கின. அந்த தாக்குதல்கள் மருத்துவமனையின் 30 நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் மேல்மாடி தண்ணீர் தொட்டிகளைச் சிதைத்திருந்தது.

– ஜெனிவா தீர்மானங்களை மீறி, இஸ்ரேல் வேண்டுமென்றே காசாவின் அப்பாவி மக்களைக் குறி வைத்து வருகின்றது என்பதற்கு தெளிவான ஆதாரமாக, விமான தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

– இதற்கும் மேலாக காசாவிற்குள் மருந்து பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால் விமானத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மேற்கொண்டும் ஆபத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஏற்கனவே பல மருத்துவமனைகள் குறைந்தளவிலான அடிப்படை மருந்து பொருட்களோடு ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதோடு, இன்னும் 10 நாட்களுக்கு குண்டுவீச்சு தொடர்ந்தால் பேரழிவாக போய் முடியுமென்று மருத்துவர்களும், மருத்துவ சேவை பணியாளர்களும் தெரிவித்தனர். இஸ்ரேலிய-எகிப்திய முற்றுகையானது, எரிவாயு இல்லாத பகுதிகளில் அவசியமான அவசர சேவைகளை வழங்க முடியாதபடிக்கு, ஆம்புலன்சுகளுக்கான எரிபொருள் வினியோகங்களையும் பாதித்துள்ளது.

-மத்திய காசாவில் அல்-நுஷ்ரத்தின் ஒரு மசூதி, சனியன்று இரவு நள்ளிரவு வேட்டைகளில் அழிக்கப்பட்டது, ஒட்டுமொத்த குடும்பங்களையும் அடியோடு அழிக்கும் அபாயத்தோடு, பெரும் எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்கள் ஒன்றுகூடும் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற டஜன் கணக்கான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

-ஜூலை 9 அன்று, மிகத் தெளிவாக “தொலைக்காட்சி” என்று பெரிய சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த காரை பாலஸ்தீன இதழாளர் ஹமீத் ஷெஹாப் ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில், ஒரு இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலினால் அவர் அங்கே எரிந்து சாம்பலானார். ஷெஹாப் உள்ளூர் பத்திரிகை நிறுவனமான மீடியா 24க்காக வேலை செய்து வந்தவராவார். “காசா பகுதி மீதான கூட்டு தண்டனையின் கொடூரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களைக் காட்டி பாலஸ்தீன இதழாளர்களை அதைரியப்படுத்துவதற்கான திட்டமிட்ட மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட” ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலையை பாலஸ்தீன இதழாளர்களின் கூட்டமைப்பு கண்டனம் செய்தது.

Exit mobile version