Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காசாவில் இஸ்ரேல் குண்டு மழை : இரண்டாவது நாளில் 229 பேர் பலி

29.12.2008.

காசா பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ் ரேல் நடத்தி வரும் கொடூர விமானத் தாக்குதல் இரண் டாவது நாளாக ஞாயிறன் றும் தொடர்ந்தது. பாலஸ்தீ னியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மிகக் கடுமையானதும் கொடுமை யானதும் இது என்று ஹமாஸ் தலைவர் இஸ்மா யில் ஹனியே கூறினார்.

இவ்வாண்டின் தொடக் கம் முதல் நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தில் இருந்து ஹமாஸ் விலகிக் கொண்டது. காசாவில் இஸ் ரேல் நடைமுறைப்படுத்திய பொருளாதாரத் தடையால் அப்பகுதிமக்கள் துயருற்ற னர். இதனால் போர் நிறுத் தத்தை விலக்கிக் கொண்ட ஹமாஸ் தெற்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி யது. நாள் தோறும் வீசப் படும் ஏவுகணை வீச்சுக்கு எதிர்வினையாக விமானத் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

ஆனால், உண்மையில் இஸ்ரேலின் இப்போதைய தாக்குதலுக்கு உள்நாட்டு அரசியலே காரணம். அங்கு பிப்ரவரி 10ல் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்த தேர்த லில் லிகுட் கட்சி வெல்லக் கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன. இதனால் ஆளும் கட்சி மக்கள் மத்தி யில் தன் செல்வாக்கை உயர்த் திக் கொள்ள காசா பகுதி யில் தாக்குதலைத் தொடங் கியுள்ளது.

சுமார் 40க்கும் மேற் பட்ட பாதுகாப்பு வளாகங் கள் மீது இஸ்ரேல் விமா னங்கள் குண்டு மழை பொழிந்தன. கடந்த சில மணி நேரத்தில் மட்டும் 229 பாலஸ்தீனியர் குண்டுக ளுக்கு பலியாகி உள்ளனர். காசா பகுதியில்மட்டும் 15 லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பாதிக்கு மேலானோர் உணவு மானியங்களால் மட்டும் உயிர் பிழைத்துள் ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக புதிய எழுச்சி ஏற்படும் என்று மூத்த ஹமாஸ் தலை வர் காலித் மேஷல் கூறினார். எங்கள் நாட்டைவிட்டு வெளியேற மாட்டோம், நாங்கள் சரணடைய மாட் டோம் என்றும் அவர் கூறி னார். இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து பிரிவினரும் அணி திரள வேண்டும் என்று ஹமாஸ் தலைவர் மேஷல் ஜம்முவில் கூறினார்.

Exit mobile version