Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காங்கிரஸ், திமுக குழு என்ன சொல்லும் என்பதை யூகிக்க முடிகிறது : ஜெயலலிதா யூகம்.

ஐந்து நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள காங்கிரஸ், திமுக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறீத்து அதிமுக தலைவர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,

 தமிழகத்திலுள்ள மைனாரிட்டி திமுக அரசை விமர்சிக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட நாடாளுமன்றக் குழுதான் இலங்கை சென்றிருக்கிறது. இக்குழுவை இந்திய அரசின் விருந்தினர்களாகவும் அதிகாரபூர்வமான குழுவாகவும் கருதி 10 அரசியல்வாதிகளுக்கும் சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துள்ளார் ராஜபட்சே. இந்த அரசியல் வாதிகளின் சுற்றுப்பயண முடிவு எப்படியிருக்கும் என்பதை எளிதில் யூகித்து விட முடிகிறது.

 இக்குழு திரும்பி வந்ததும் .கருணாநிதியிடம் அறிக்கை சமர்பிக்கும் மிகப்பெரிய பிரச்சனையை கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு.கிட்டத்தட்ட நான்கு லட்சம் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனப்பூர்வமாக மருவாழ்வுப் பணியைச் செய்ய முயர்சித்து வருகிறது. என்று இக்குழு தெரிவிக்கும். சில குறைபாடுகள் இருக்கின்றன என்றும், மிகப்பெரிய பிரச்சனைகளை கையாளும் போது இது போன்ற குறைகள் ஏற்படுவது சகஜம்தான் என்றும் இக்குழு தெரிவிக்கும்.

ஆனால் ஐம்பதாண்டு கால தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டம் என்னவாகும்? சிஙகளர்கள் மட்டும் என்ற கொள்கை மற்றும் தங்கள் சொந்த மண்ணிலேயே தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்ட கேடு விளைவிக்கக் கூடிய ‘தரப்படுத்தல்” முறை ஆஅகியவை என்னவாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா.

Exit mobile version