Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காங்கிரஸ் எம் பி களுடன் கருணாநிதி சந்திப்பு : ஈழப் பிரச்சனை எனக் கூறப்படுகின்றது

karunanithi_congrass_mntதிமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்காவிட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்தித்தனர்.
சந்திப்புக் குறித்து உண்மைத் தகவல்கள் இன்னும் வெளிவராவிடினும் இத்தகைய சந்திப்புக்களும் மிரட்டல்களும் பேரம் பேசுவதற்காகப் பயன்படுத்துவதே தமிழ் நாட்டு அரசியல் வழமை.

Exit mobile version