Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கழிப்பறைகளை விட செல்போன்கள் இந்தியாவில் அதிகம்!: ஐ.நா. அறிக்கை.

 கழிப்பறைகளைவிட செல்போன்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மக்கள் உரிய சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரிவுக் கான பல்கலைக்கழக நிறுவனத்தின் இயக்குநர் ஜாபர் அடீல் கூறுகையில் இந்தி யாவில் 54 கோடியே 50 லட்சம் செல்போன்கள் உள்ளது. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 45 சத வீதத்தை இது பூர்த்தி செய்வதாக உள்ளது. ஆனால் 36 கோடியே 60 லட்சம் மக்கள் மட்டுமே அதாவது 31 சத வீத மக்கள் தொகை மட் டுமே மேம்பட்ட சுகாதார வசதியை பெறும் நிலையில் உள்ளனர். இந்தியா வசதி யான நாடாக உள்ளது.

நாட்டில் பாதிப்பேர் செல்போன் வைத்திருக்கும் நிலையில், சுகாதார வசதி பெறுவதில் தேக்கம் காணப்படுகிறது எனக் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று இந்த அறிக்கையை வெளியிட்டது.

தற்போதைய சுகாதார சூழ்நிலை உலக அளவில் தொடரும் பட்சத்தில் 2015ம் ஆண்டில்100 கோடி மக்கள் கழிப்பறை போன்ற சுகாதார வசதி இல்லாத நிலை யில் பரிதவிப்பார்கள் என யுனிசெப்பும் உலக சுகாதார நிறுவனமும் மதிப்பிட்டுள் ளன.

Exit mobile version