Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிட்டால் பல்கலைக்கழகத்தை மூடுவேன் : உயர்கல்வி அமைச்சர் மிரட்டல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த வாரம் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மாணவர்கள் வருகைதராவிட்டாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமது விரிவுரைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் வெலிக்கந்தை புனர்வாழ்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை விரிவுரைகளை பகிஸ்கரிப்பது என்ற மாணவர்களின் தீர்மானத்தில் இன்னும் மாற்றங்கள் தென்படவில்லை.

இதற்கிடையில் மாணவர்கள் தவறு இழைத்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து விடுவிக்கவேண்டும் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version