Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்விகற்கும் உரிமைக்கக பிரித்தானிய மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் உயர்கல்வி கற்கும் உரிமைக்கு எதிரான பிரித்தானிய அரசின் திட்டங்களுக்கு எதிரான ஆர்பாட்டம் லண்டன் தெருக்களில் 09.11.11 புதன் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட ஆர்பாட்டத்தில் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கும், சுந்திர வர்த்தகத்தகக் கொள்கைக்கும் எதிரான சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன. பிரித்தானிய மாணவர் ஒருவர் கல்வி கற்பதற்கான கற்கைக் கட்டணம் வருடத்திற்குப் 9000 பவுண்ட்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தவிர வசதியற்ற மாணவர்களுக்கான உதவித் தொகையை பிரித்தானிய அரசு பல மடங்குகளாகக் குறைத்துள்ளது. மேல்தட்டு பணம்ப்படைத்த மாணவர்கள் மட்டுமே பல்கலைக் கழகக் கல்வியை மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. பிரித்தானிய அரசின் வெள்ளை அறிக்கை மாணவர்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படுகிறது. மார்க்சியக் கருத்துக்களைக் கொண்ட மார்க் பேர்க்பெல்ட் தலைமைப் பாத்திரம் வகிக்கும் தேசிய மாணவர் மன்றம் அதிக மாணவ்ர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. தேசிய மாணவர் மன்றம் ஆர்ப்பாட்டத்தில் பிரதான பாத்திரம் வகித்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தை மிகப் பெருமளவிலான பிரித்தானியப் பொலீசார் கண்காணித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது செய்யபடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிரித்தானிய பொலிஸ் அரசா எனவும் மாணவர்கள் கோசமிட்டனர்.
தேசிய மாணவர் மன்றத்திற்கு எதிரான கருத்துக்களை பிரித்தானிய வியாபார ஊடகங்கள் ஏற்கனவே பரப்ப ஆரம்பித்திருந்தன.

Exit mobile version