தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப் பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.
மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு.
சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன்வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.
அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறை யில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல் டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.
அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்திய மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் தினசரி 20 ரூபாய்க்கும் கீழான தொகையில் “வாழ்வதாக” மதிப்பிடப்பட்டுள்ளது.