இந்தியா டுடே இதழ் திருமணத்திற்கு முந்தைய பாலியல் நட்பு தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது அதில் குஷ்பு தமிழ் பெண்களை இழிவு படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களிலும் குஷ்புவுக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் கால ஓட்டத்தில் திருமா திமுக கூட்டணியில் ஐக்கியமானார். குஷ்புவும் திமுக தலைமைக்கு நெருக்கமானார். குஷ்புவுக்கு விரைவில் மேலவையில் பதவி வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி,பாலகிருஷ்ணன் குஷ்பு மீது தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். குஷ்பு கற்பு பற்றி தவறான எந்தக் கருத்துக்களையும் சொல்லாத நிலையில் அன்றைக்கு குஷ்புவுக்கு எதிராக வரிந்து கட்டி களமிரங்கியவர்களே இன்று ஏதோ ஒருவகையில் குஷ்புவை பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் உங்களின் கடந்த கால எதிர்ப்புகள் அர்த்தமற்றவை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இத்தீர்ப்பு குறித்து குஷ்பு கூறும் போது. ‘’இத்தீர்ப்பு
எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. ஒரு பெண் வெற்றிகரமாக போராடுவது என்பது மிக லேசானதல்ல. நான் வெற்றி பெற்றுள்ளேன். உண்மையில் நான் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை ” என்றார் குஷ்பு.