Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கறுப்பினத்தவர் மீது கட்டவிழ்த்து விட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் கொலை வெறி

Ferguson2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பேர்குசன் நகரத்தில் வெள்ளை நிறத்தைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி டரன் வில்சன் என்பவர், கறுப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுடுக் கொலைசெய்தார். சில நாட்கள் விடுமுறையிலிருந்த அந்தப் பொலீஸ் அதிகாரி குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் ஆரம்பித்துளன.

மைக்கல் பிரவுன் என்ற அமெரிக்க இளைஞன் கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவர் என்பது மட்டுமல்ல உழைக்கும் வர்கத்தைச் சார்ந்தவர் என்பதால் கொலையாளி எந்த விசாரணையுமின்றி தப்பித்துக்கொண்டார்.

இப் படுகொலையின் பின்னர் கறுப்பின மக்கள் நடத்திய அமைதிப் பேரணிகள் மீது அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ காவலர்களன போலிஸ் படை தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டது. பேர்குசனை ரணகளமாக்கிய போலிஸ் படை கொலையின் பின்னான ஒவ்வொரு நாளும் கறுப்பின மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவித்துவிட்டது.

கறுப்பின மக்களின் வாக்குகளோடு அதிகாரத்தில் அமர்ந்துகொண்ட ஒபாமா ஆட்சிக் காலத்திலேயே கறுப்பின மக்கள் மீது அதிக வன்முறைகள் ஏவப்பட்டுள்ளன.

இந்த வாரம் மைக்கல் பிரவுணின் ஓராண்டு நினைவுகூரல் நிகழ்வுகளும் அமைதி ஊர்வலங்களும் நடைபெற்றன.

அமைதிப் ஊர்வலத்தில் சிவில் உடையில் உலாவிய அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு போலிஸ் மீது துப்பாக்கிப் பிரையோகம் செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டதாகக் கருதப்பட்ட இளைஞனைப் போலிஸ் துரத்திச் சென்று அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கவலைக்கிடமான முறையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் போலிசார் எவரும் காயமடையவில்லை என போலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்புத் தெரிவிக்கின்றது.

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணக்கொள்ளையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வை நிறவாதமாக மாற்றும் சதித் திட்டத்கை அரசுகள் செயற்படுத்துகின்றன. ஐரோப்பா முழுவதும் அகதிகள் பிரச்சனையை முன்வைத்து நிறவாதம் தூண்டப்படுகின்றது.

முதலாளித்துவ ஜனநாயகம் காலாவதியாகிப்போன காலப்பகுதியை உலகம் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நிறவாதம் கலந்த ஏகபோக அமைப்பு கறுப்பின மக்களை வறுமையின் விழிபிற்குள்ளேயே வைத்துள்ளது.

வெள்ளை மேலாதிக்கவாதிகளும் அமெரிக்க அதிகார வர்க்கமும், சட்டமும் ஒழுங்கும் நீதியும் கறுப்பினத்தவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்குமானதல்ல என மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

தாக்குதலோடு தொடர்புடைய போலிஸ் நிர்வாக விடுமுறையில் அனுப்பட்டுள்ளனர். பேர்குசனில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version