அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் தமிழ் சினிமா வரலாற்றாசிரியரான தியோடர் பாஸ்கரன் (மணிரத்தினத்தின் சினிமா : இந்தியா டுடே), தமிழ் சினிமா இயக்குனரான அம்ஷன்குமார், (தமிழில் மாற்றுச் சினிமா : நிழல்), தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களான
புகலிட இயக்குனரான அருந்ததி (புகலிட சினிமா : அவரது ‘முகம்’ படம் தொடர்பாக), இயக்குனர் புதியவன்; (உயிர்நிழல்; : அவரது ‘மண்’ படம் தொடர்பாக) போன்றோர,; அவர்களது படம் தொடர்பான எனது பார்வைக்கு எதிர்விணை செய்திருக்கிறார்கள்.
இவைகள் எவற்றுக்கும் இன்றளவிலும் நான் கடுமையான எதிர்விணை செய்யவில்லை. காரணம் தமிழ் சினிமா குறித்த அவரது மதிப்பீடு. நிறையத் தமிழ் படம் பார்த்த அடிப்படையில் அவர் ஏழுதுகிறார். அது பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை..
ஒரேயொரு விதிவிலக்கு சினிமாவே பார்க்காமல், தமிழ் சினிமாவைக் கழித்துக் கட்டுகிற திரு. சிவசேகரம் அவர்களைத் தான் கொஞ்சம் கடுமையாக எதிர்கொண்டேன். காரணம், ஒரு தீவிரமான தமிழ் சினிமா பார்வையாளனாக இல்லாத அவர், எவ்வாறு தமிழ் சினிமாவை ஒரு சேர நிராகரிக்க முடியும் எனகிற ஆதங்கம் தவிர வேறில்லை.
பிறருக்கு நான் எதிர்விணை செய்யாதற்கான காரணம் சினிமாவும் வரலாறும் சினிமா அழகியலும் தெரிந்தவர்களாக அவர்கள்; எழுதுகிறார்கள். தமிழ் சினிமா குறித்துத் தீர்;மானமான பார்வைகள கொண்டவர்களாக அவர்கள் எழுதுகிறார்கள். அதுவும் கருத்துரீதியில் தமது பார்வைகளை முன்வைக்கிறார்கள். மாறுபாடு கொள்வது அவர்களது உரிமை எனும் அளவில், அவர்களுக்குரிய மரியாதையைத் தந்துவிட்டு, நான் எனது விமர்சன நெறியை மேம்படுத்திக் கொண்டு மேற்செல்கிறேன்.
இன்னும,; எனது ‘அரசியல் சினிமா’ புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய அம்ஷன்குமார் (அரசியல் சினிமா : நிழல்) மற்றும் அருந்ததி (புகலிட சினிமா : இணைத் தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர் : முன்னுரை) போன்றவர்களுக்கு எனது நூல்களின் உள்ளேயே மாறுபாடு கொள்ள நான் முழுச் சுதந்திரத்தினையும்; கொடுத்திருக்கிறேன்.
எனது வரவிருக்கும் ‘புத்தனின் பெயரால் : திரைப்படச் சாட்சியம்’ எனும், தமிழ் – சிங்கள-ஆங்கில மொழிகளில்; வந்த ஈழத் தமிழர் குறித்த திரைப்படங்கள் பற்றிய எனது சினிமா நூலுக்கு முன்னுரை எழுதுமாறு இயக்குனர் புதியவனைக் கேட்டிருக்கிறேன். எனது இரண்டு தொகுதி நூலான (‘தமிழில் மாற்றுச் சினிமா’ : சினிசங்கம்) பாலு மகேந்திரா முன்னுரை கொடுத்திருக்கிறார்.
நானும் இதே விதமாக எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா,
சினிமா விமர்சனம் என்பது என்;னளவில் ஒரு அரசியல்-அழகியல் செயல்பாடு எனவும், சக பார்வையாளனை நோக்கி எனது நோக்கை நான் பகிர்ந்துகொள்ளும் ஒரு சமூகச் செயல்பாடு எனவும் நான் புரிந்திருக்கிறேன்.
இன்னொரு வகையான விமர்சன முறை உண்டு. இதற்குப் பெயர்
இவர்களுக்குக் கடுமையாக எதிர்விணை செய்யாமலிருப்பது என்னளவில் சாத்தியமில்;லை.
இன்றளவிலும் ஜெயமோகனின் இன்னொரு ‘கச்சடா’ முகம் என நான் நம்புகிற ‘சூரியா’ என்கிற ‘சூர்யா’ என்பவர் ஒரு முழக்கட்டுரைத் தாக்குதலை, சினிமா குறித்த எனது பார்வைகளின் மீது முன்பு தொடுத்திருந்தார். (சொல் புதிது : இணைய இதழ்). அதனது ‘கறுவுதலை’ ஞாபகம் கொண்டு அந்தக் கட்டுரையை நான்; புறந்தள்ளிவிட்டேன்.
ஷோபா சக்தி, ‘உலகத் திரைப்படங்கள் குறித்த எந்த அறிவுமில்லாமல், அரைகுறைப் புரிதலில’; நான் கட்டுரை எழுதுகிறேன் என்கிறார் இந்தச் சினிமா மேதை (ஈழமுரசு: பாரிஸ்). இது கருத்துரீதியிலான விமர்சனம் எனவும் அவர் திருவாய் மலர்ந்து அருளுகிறார்.
ஒருவர்; ஒற்றை வரியில் ‘சொறிந்து விட்டு’ப் போகிறார். மற்றவர்; எனது ‘உழைப்பின்’ மீதான நம்பகத் தன்மை குறித்த கேள்வியை எழுப்புகிறார்.
ஜெயமோகனில் இருந்து துவங்கலாம்.
ஜெயமோகன், உங்களுக்கு உலகச் சினிமாவும் தெரியாது, சினிமா அழகியலும் தெரியாது. சினிமாவின் அரசியலும் தெரியாது. ‘கஸ்தூரி மானு’க்கு வசனம் எழுதுகிற வரை, சினிமா ஒரு ‘பிளாஸ்டிக் ஆர்ட்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் நீங்;கள். இலக்கியம் போல சினிமா குறித்த உங்கள் பார்வை தீவிரமானது இல்லை.
சினிமாவுக்குக் வசனம் எழுதுகிற ‘சான்சுக்காக’ விமர்சனம் எழுதுகிற நபர் நீங்கள். எனக்கு அப்படியான நோக்கங்கள் கிஞ்சிற்றும் இல்லை. அப்படி ஏதேனும் நான் படம் செய்தால் அது ‘என்னுடைய’ படமாகத் தானிருக்கும்.
சினிமா விமர்சகர்களாயிருந்து திரைப் படைப்பாளிகளான, அரசியல் கடப்பாடுடைய படைப்பாளிகளான பிரெஞ்சு இயக்குனர்கள் த்ரூபோவும் கோதாரத்தும், இந்திய இயக்குனரான ரித்விக் கடக்கும், இங்கிலாந்து இயக்குனரான கென்லோச்சும் தான் எனது திரைப்பட ஆதர்சங்கள்.
சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது உங்களவில் ‘எலக்டிரிசிடி டிபார்ட்மென்டில்’ வேலை செய்கிற மாதிரி, காசு பார்க்கிற வேலை என நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.
திரைப்படம் எடுத்ததற்காகத் துப்பாக்கியின் முன் உயிரைக் கொடுத்த மூன்றாம் உலகின் திரைப்பட இயக்குனர்கiயும், காமெராமேன்களையும் உங்களுக்குத் தெரியாது. திரைப்படத்தைக் ‘கலை மொழிகளின் உச்சமாகக்’ கொண்டாடிய மேதைகளை உங்களுக்குத் தெரியாது.
சூர்யா மற்றும் சூர்யா எனும் புனைபெயர்களில் தங்களைத் தாங்களே போற்றிப் பாடிக் கொண்டிருந்த நகல்போலி நீங்கள். சூர்யாவின் ஆசை ‘சினிமாவில் நுழைவது’ என அவர் எழுதியிருந்தார்.
என்ன ஆச்சர்யம், நீங்கள் சினிமாவில் ‘கஸ்தூரிமான்’, ‘நான் கடவுள்’ என நுழைந்ததும், சூர்யா இணையதளத்தை விட்டே போய்விட்டார். எழுதுவதையே விட்டுவிட்டார். எவ்வளவு பெரிய மோசடிப் பேர்வழி நீங்கள்!
உங்கள் விவேகத்திற்கும் இலக்கிய நேர்மைக்குமான மிகமுக்கியமான சான்று இது : உங்கள் திரைப்பட அபிலாஷைகளுக்கு அச்சுறுத்தலும் எதிர்ப்பும் வருகிறது எனத் தெரிந்ததும், எம்.ஜி.ஆர. மற்றும் சிவாஜி பற்றிய உங்கள் அயோக்கியத்தனமான கட்டுரைகளை உங்கள் தளத்திலிருந்து எடுத்துவிட்டீர்கள்;.
‘1968’ கட்டுரையைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?
‘1968’ என்பது உங்களைப் பொறுத்து வெறும் எண்கள். உலகப் புரட்சியாளர்களுக்கு அது ஒரு இலட்சியக் கனவு. அதற்காக உயிரைக்கொடுத்த மாணவர்கள் பற்றி இந்துத்துவாதியான உங்களுக்கு என்ன தெரியும்? ‘வழக்கம் போல அங்கே படித்ததை இங்கே எழுதுகிறார்’ என்கிறீர்கள், என்னுடைய வாழ்க்கையையும், என்னுடைய அவஸ்தைகளையும்;, என்னுடைய படிப்பையும்தான், நான் எனக்குத் தெரிந்த, நான் நேசிக்கிற மொழியில் எழுத முடியும்.
முட்டாள் போல எழுதுகிறீர்கள். இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துதான் நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? கேரளக் கரைப் பககமிருந்து, ‘அங்கே படித்ததை’ எதற்காகத் தமிழுக்கு இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்?, உங்களi எவன் கேட்டான் ‘அங்கேயிருந்து இங்கே’ அதனை எழுதுங்கள் என்று?
ஜெயமோகன், உமது ரசனையும் எனது ரசனையும், உமது வாசிப்பும் எனது வாசிப்பும், உமது தேர்வுகளும் எனது தேர்வுகளும் முற்றிலும் நேர் விரோதமானது. ஆகவே அப்பனே, ‘பேத்தாமல்’ எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.
ஒன்றில் ஈடுபாடு இல்லையென்றால், ஒன்றைப் பற்றித் தெரியவில்லை என்றால், வாயை அல்ல கையைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். அதனை விட்ட விட்டு, ‘ஆல் இன் ஆல் அழகுராசா’ மாதிரி சொறிச் சேட்டைகளை, நான்கு சொற்களில் எழுதிக் கொண்டிருக்கக் கூடாது.
‘ஈழத்தமிழர்களுக்கு உலக இலக்கிய, இந்திய இலக்கிய வாசிப்பு மற்றது அறிவு இல்லை’ என்று எழுதினீர்கள். ஈழத்தவர்களான மு.புஷ்பராஜனும, டி.சே.தமிழனும், ஈழத்து இலக்கியம் ‘விரல் சூப்பிக் கொண்டிருக்கவில்லை’ என எழுதிய பின்னால், நைஸாகச் ‘ஜகா’ வாங்கிவிட்டீர்கள்.
ஒரு விவாதத்தில் முழுமையாகப் பங்கு பற்ற மனமிருந்தால் எழுதுங்கள், அல்லவெனில் வாயை, ஸாரி, கையைப் பொத்திக் கொண்டிருங்கள் ஜெயமோகன்.
இப்போது இந்தச் ஷோபா சக்தி.
ஷோபா சக்தி என் சினிமா கட்டுரைகளின் பாலான தனது ‘ஈழமுரசு’க் கட்டுரையை ‘கருத்து ரீதியிலான’ விமர்சனக் கட்டுரை (சத்தியக் கடதாசி இணையதளம்) என்கிறார்.
கமல்ஹாஸனின் ‘ஹே ராம்’ தொடங்கி, ‘தசாவதாரம்’ வரை அவர் கமல்ஹாஸனின்; அரசியல் பற்றிப் பேச முடியும். ‘பம்பாய்’ துவங்கி, ‘கன்னத்தை முத்தமிட்டால் வரை’, மணிரத்தினத்தின் காஷ்மீர் மற்றும் ஈழம் பற்றிய ‘தேசியம்’ குறித்த அவரது பார்வை பற்றிப் பேச முடியும்.
மணிரத்தினத்தின்; தேசியம் பற்றிய படங்கள் பற்றி நான் விரிவாக எழதியிருக்கிறேன். கமல்ஹாஸன் பற்றி அதே அளவில் நான்; எழுதியிருக்கிறேன். ‘தமிழில் மாற்றுச் சினிமா’, ‘இந்தியப் பிரிவினைச் சினிமா’ மற்றும் ‘வன்முறை-திரைப்படம்-பாலுறவு’, ‘மணிரத்தினத்தின் சினிமா’ என எனது நூல்களில் இவர்களது படங்கள் பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன்.
ஷோபா சக்தி, நீங்கள் கருத்துக் கட்டுரைதான் எழுதியிருக்கிறீர்கள் என்றால், நான் எங்கே இந்துத்துவத்தை ஆதரிக்கிறேன், இந்தியப் பெருந்தேசியத்தை ஆதரிக்கிறேன் என்றுதான் தோண்டித்துருவி எழுதியிருக்க வேண்டும்.
அப்படியெல்லாம் நீங்கள் எழதியிருக்கவில்லை.
பாலுமகேந்திரா, மகேந்திரன் பற்றியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள். பாலுமகேந்திரா தொடர்பாக ஈழமுரசில் நீங்கள் கொடுத்த பட்டியலே பிழையான பட்டியல். பாலுமகேந்திரா எடுக்காத படங்களை எல்லாம் அக்கட்டுரையில் நீங்கள் பாலுமகேந்திர எடுத்ததாகச் சொல்லியிருந்தீர்கள்.
பாலுமகேந்திராவுடன் நான்கு நாட்கள் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தியவன் நான். அந்த உரையாடலின் சில பகுதிகள் ‘திண்ணை’ இணைய இதழிலும், ‘கனவு’ சிற்றதழிலும் வெளியாகியிருக்கிறது அதனை முழு நூலாகக் கொண்டு வரவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்லி பாலுமகேந்திரா பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கொடுமையிலும் கொடுமை சாமி.!
மகேந்திரன் படங்கள் பற்றிய எனது கட்டுரை ‘தமிழில் மாற்றுச் சினிமா’ நூலில் இருக்கிறது. அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள் பற்றி என்னிடம் அளக்கிறீர்கள். அவரை இலண்டன் உலகத் திரைப்பட விழாவில் நேரில் சந்தித்து, அவரோடு அவரது படங்கள் பற்றி உரையாடியவன் நான்.
ஆடூர் கோபாலகிருஷ்ணனின் முழு அரசியல் படங்கள் பற்றியும், ஜான் ஆப்ரஹாமின் படங்கள் பற்றியும் எழுதியவன் நான். எனது ‘அரசியல் சினிமா’ நூலில் இருவர் பற்றியும் விரிவான கட்டுரைகள் இருக்கிறது. வாசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
‘கேணத்தனமாக’ எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
உங்களது ஈழமுரசுக் கட்டுரை, நிஜத்தில் அரசியல் அல்லது கருத்து மாறுபாடுகள் பற்றியதாகத் துவங்கவில்லை.
எனக்குக் காதில் பூச்சுற்ற வேண்டாம்.
அ.மார்க்ஸ் கட்டுரையை ‘அம்மா’விலிருந்து எடுத்துப் போட்டு, அதற்கான எனது பதிலை மட்டும் ‘தணிக்கை’ செய்த ஜனநாயகவாதி ஷோபாசக்தி, உங்கள் ‘ஈழமுரசு’க் கட்டுரைiயும் முழுமையாக ‘மஞ்சள் கடதாசியில்’ மறுபிரசுரம் செய்யுங்கள். உங்கள் ‘கருத்து விமர்சன இலட்சணத்தை’ வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
அப்போது தெரியும், உங்களது கட்டுரை, கருத்து மாறுபாட்டுக் கட்டுரையா அல்லது வயித்தெரிச்சல் கட்டுரையா என்று?
உங்களது கட்டுரை வயித்தெரிச்சலிலும், காழ்ப்புணர்விலும் பிறந்தது என்பதற்கான எனது ஆதாரங்கள் இவைதான் :
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒரு நாளைக்கு 6 படங்கள் பார்க்கிற என்னால், படங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்கிறீர்கள். படங்களைப் புரிந்து கொள்ளாமல், அரைகுறையாகப் பார்க்கிறேன் என்கிறீர்கள். அல்லது படங்களே பார்க்காமல் நான் எழுதுகிறேன்; என்பது உங்களது பார்வை.
இந்த ‘நக்கலில்’ இருந்துதான் உங்கள் கட்டுரையே துவங்குகிறது
உங்கள் கேள்வியை நீங்கள் ஒரே ஒரு தளத்தில்தான் ‘மட்டும்தான்’ நியாயப்படுத்த முடியும். நான் பார்த்து எழுதுகிற உலகத் திரைப்படங்கள் ‘பார்க்காமல் எழதப்பட்டது, அரைகுறையாக எழுதப்பட்டது அல்லது புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டது’ என்கிற உங்கள் கூற்றை, நீங்கள் நடைமுறையில் படம் பார்த்த, உங்கள் சொந்த அனுபவத்தில் நின்றுதான் நிறுவியிருக்க வேண்டும்.
நீங்கள,; நான் எழுதுகிற அல்லது குறிப்பிடுகிற உலகப் திரைப் படங்களில் ஒரு படத்iயேனும் பாரத்திருக்கிறீர்;களா? ஒரு படம் வேண்டாம், அரைவாசிப் படம் பார்த்திருக்கிறீரகளா? அரைவாசிப் படம் கூட வேண்டாம், ஐந்து நிமிடமாவது அப்படத்தைப் பாரத்திருக்கறீர்களா?
சரி. அப்புனு, அது தான் போகட்டும், அந்தத் திரைப் படத்தின் டிரெயிலரையாவது பார்த்திருக்கிறீர்களா?
இதில் எதுவும் இல்லை. கண்ணா, கருத்துக் கண்ணா, அப்புறம,; எப்படி நான் படம் பார்க்கவில்லை, படம் பார்த்து அரைகுறையாக எழுதுகிறேன், படம் பற்றிப் புரியாமல் எழுதுகிறேன் என உங்களால் சொல்ல முடியும் கண்ணா?
படு சிம்பிளான கேள்வி.
படங்களைப் பார்ப்பது தொடர்பான என் மீதான நம்பிக்கையின்மையை, நக்கலாக எழுப்புவதாகத் தான் உங்கள் கட்டுரை துவங்கி எழுதப்படுகிறது.
திரைப்பட விழாக் ‘கலாச்சாரம்’ தெரிந்தவருக்குத்தான், படம் பாரக்கும் ‘கலாச்சாரம்’ பற்றித் தெரியும். உங்களுக்கு என்ன தெரியும்?
விஸ்வாமித்திரன், சுப்ரபாரதிமணியன், பிரஸன்னா ராமஸ்வாமி, அம்ஷன்குமார், தியடோர் பாஸ்கரன் மற்றும் அறந்தை மணியன் என நிறையப்பேர் திரைப்பட விழா பற்றிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள் படித்துப் பாருங்கள். பாரிசிலிருந்து வந்த ‘பாலம்’ மற்றும் இங்கிலாந்திலிருந்து வந்த ‘நாழிகை’ போன்றவற்றில் நான் இலண்டன் உலகத் திரைப்பட விழாக்கள் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறேன. வாசித்துப் பாருங்கள்.
திரைப்பட விழாக் கலாச்சாரம் பற்றியே தெரியாத உங்களிடமெல்லாம் விவாதிக்க வேண்டியிருப்பதுதான் எங்களது தலைவிதி.
சரி. எனது உலக சினிமா தொடர்பான ‘நம்பகத்தன்மை’ குறித்த ‘சந்தேகத்தை’ நிருவுவதற்கான உங்களது ஆய்வு நெறிதான் என்ன சொல்லுங்கள்?
நானே சொல்கிறேன். பாலு மகேந்திரா,மணிரத்தினம்,மகேந்திரன் படங்கள் பற்றி நான் எழுதவில்லை அல்லது அரசியல் மற்றும் கருத்து ரீதியில் உங்கள் கருத்தோடு நான் உடன்படவில்லை என்று துவங்குகிறீர்கள்.
கண்ணா, ஷோபா சக்தி கண்ணா, இது அரசியல் விவாதம். கருத்தியல் விவாதம். இங்கு நான் படம் பார்த்தது,பார்க்காமல் எழதுவது, புரிந்து கொள்ளாமல் எழுதுவது என்கிற பிரச்சினையே வரவில்லை. நீங்கள் அரசியல் ரீதியில் மாறுபடுகிறீர்கள். இதில் எனக்குப் பிரச்சினையே இல்லை. அது உங்கள் அரசியல். உங்கள் கருத்து. அதில் சிலவேளை நான் முரண்படவும் கூடும்.
ஆனால், கட்டுரையை நீங்கள் இப்படியா துவங்கினீர்கள்? இல்iயே!
தமிழ்சினிமா பார்த்திருக்கிறீர்கள். அதுபற்றிக் குறைந்தபட்ச அறிவாவது தங்களுக்கு இருக்கிறது. அதுவும் ஒழுங்காக இல்லை. பாலமகேந்திரா படங்களின் பட்டியலை, அவர் எடுக்காத படங்களையும் சேர்த்து எழுதினீர்கள்.
என் நேரடியான கேள்வி இதுதான்-
எனது உலக சினிமா அறிவையும், எனது அல்லும் பகலுமான ‘உழைப்பையும்’ நீங்கள் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள். அவமானப்படுத்தியிருக்கிறீர்;கள். எனது விமர்சனங்களின் ‘நம்பகத் தன்மையை’ கேள்விக்கு உட்படுத்தியி;ருக்கிறீர்கள்.
இது எப்படி உங்களுக்கும் சாத்தியம்?
உலக சினிமா அறிவும் கிடையாது. நான் எழுதும் படங்கள் குறித்த அறிவும் கிடையாது. பார்த்ததும் கிடையாது. அப்பறம் எப்படி சாமி, என்னுடைய உலக சினிமா குறித்த புரிதலையும், எனது அறிவையும், எனது அரசியலையும் நீங்கள் கேள்விக்கு உட்படுத்துவது முடியும்?.
அப்பட்டமான ‘காழ்ப்புணர்வை’, நீங்கள் ‘அரசியல் மாறுபாடு’ எனவும,; ‘கருத்து மாறுபாடு’ எனவும், அதுதான் உங்களது ‘விமர்சனத்தின் அடிப்படை’ எனவும் மற்றவர்களுக்குக் ‘கதை’ விட்டுக் கொண்டு திரிகிறீர்கள்.
என்னை விமர்சியுங்கள். தெரிந்து கொண்டு அப்புறமாக விமர்சியுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன். தமிழில்தான் நான் சொல்கிறேன், உலக மொழியில் சொல்ல முயலவில்லை,
புரிகிறதா ஷோபா சக்தி?
எனக்குத் தெரியாத, எனக்கு அறிவு இல்லாத, நான் பார்க்காத, நான் அனுபவம் கொள்ளாத, நான் வாசிக்காத, எது பற்றியும் நான் எழுதுவதில்லை.
ஆனால், இதில் ஏதொன்றும் இல்லாமல், எனது அறிவையும், எனது உழைப்பையும், எனது அனபவத்தையும், கொச்சைப்படுத்துகிற எவரையும் நான் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் எதிர்கொள்வேன்.
அதனைத்தான் நான் ஜெயமோகன் முதல் ஷோபாசக்தி வரை செய்கிறேன்.
அதனை இனியும் நான் தொடர்ந்து செய்வேன். ஏனெனில் எனது ஆளுமையின் ஒரு பகதி எனது எழுத்துக்கள். இவ்வாறான ‘அதிரடிகளை’ எதிர்கொள்வதென்பது,. எனது பேராசான் கார்ல் மார்;க்ஸ் எனக்குச் சொல்லித் தந்த அரிசு;சுவடிப் பாடம்..
சொறிச் சேட்டைகள் வேண்டாம், கருத்து மாறுபாடுகளை எழுதுங்கள். எனக்குக் கால அவகாசம் இருந்து, முடிந்தால், பொறுமையாகப் பதில் சொல்கிறேன்….