Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்: லசந்தவுக்கு யுனெஸ்கோ விருது.

07.04.2009.

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான”யுனெஸ்கோ’ 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர விருதை வழங்கவுள்ளது.

அவர் தனக்கு ஆபத்துள்ளதை உணர்ந்தும் தனது மரணம் வரை உண்மையை பேசியதால் இவ்விருதுக்கான தேர்வாளர்களால் இவரது பெயர் ஏகமனதாக ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அவர் எழுதி வெளியிட்ட ஆசிரிய தலையங்கத்தின் பின்னரான மூன்று நாட்களுக்குப் பின்னரே ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

 

போருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த லசந்த பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய முக்கிய பண்புகளை தனது ஊடகவியலில் கடைப்பிடித்ததற்காக இவ்விருது அவருக்குப் பொருத்தமானது என்றும் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார்

 

அத்துடன் அவர் ஊடக சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்ததுடன் இதன் அடிப்படையே கொலைக்கான ஆரம்பமாக இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இவ்விருது மே மாதம் மூன்றாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் வழங்கப்படவுள்ளது.

 

Exit mobile version