Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருத்துச் சுதந்திரம்: பெண்கள் ஊடகத்துறையில் பங்காற்ற வேண்டும்

* பாகிஸ்தான் ஊடகவியலாளர் ரஹிமுல்லாயூ ஸாலாகி ஊடகத்துறையில் பெண்கள் துணிச்சலுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதன் மூலமே கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க முடியுமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பெஷாவர் நகரிலிருந்து வெளிவரும் “த நியூஸ் இன்ரநஷனல்’ பத்திரிகையின் ஆசிரியர் ரஹிமுல்லாயூ ஹிப்ஸலாகி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு மாத்தறை ஊடக இல்லத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் ஸலாஹி கருத்துப் பரிமாறுகையில் மேலும் கூறியதாவது;
பத்திரிகையில் செய்திகளை வெளியிடும் போது கருத்துச் சுதச்துந்திரம், பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடும் தன்மை, துணிச்சல் என்பன வேண்டும்.
எழுத்துத் திறமை இலகுவில் எவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், அதை வைத்து தங்கள் பேனாக்களை உரியவாறு பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் பொறுமைசாலிகள். அதேபோல் எந்த விடயங்களையும் எளிதில் பெற்று தாங்கள் கடமையாற்றும் பத்திரிகைகளில் எழுத அவர்களால் முடியும்.
இது ஒரு அழகிய நாடு. எமது நாட்டுக்கும் இலங்கைக்கும் பண்டைக் காலம் தொடக்கம் கலாசார, அரசியல் துறைகளில் உறவுகள் பேணப்பட்டுவருகின்றன.
ராவல்பிண்டிக்கு அருகே “தக்ஸலா’ என்ற பௌத்த சின்னங்கள் நிறைந்த ஒரு இடம் இருப்பதை அங்கு செல்லும் எவரும் காணலாம்.
எமது நாட்டிலும் முழுநேர செய்தியாளர்கள், அலுவலக செய்தியாளர்கள், பகுதிநேர செய்தியாளர்கள் என்று பல்வேறு தரங்களில் கடமை புரிகின்றனர்.
முழுநேரச் செய்தியாளர்களுக்கும் பகுதிநேரச் செய்தியாளர்களுக்கும் அவர்களின் செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமானால்தான் அதற்கேற்ற கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்திருப்பதைப் போன்று நீங்களும் எமது நாட்டுக்கு அவசியம் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version