வரும் நவம்பரில் நடை பெற உள்ள அமெரிக்க குடியரசு தலைவர் தேர் தலில் வேட்பாளர்களின் நிறம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்று அமெரிக் காவில் நடைபெற்ற கருத் துக் கணிப்புகள் கூறுகின் றன. இரு வேட்பாளர்களின் ஒருவர் கறுப்பு நிறத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சி வேட் பாளர் பாரக் ஒபாமா கருத் துக் கணிப்பில் 45 சதவீதம் பெற்று முன்னிலையில் உள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் மக்கெய்ன் 39 சதவீதம் பெற்றுள்ளார். கறுப்பர்களில் 89 சதவீதத் தினர் ஒபாமாவுக்கும் இரண்டு சதவீதத்தினர் மக்கெயினுக்கும் வாக்க ளித்துள்ளனர் என்று நியூ யார்க் டைம்ஸ் 1 சிபிஎஸ் நியூஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
வெள்ளையர்களில் 46 சதவீதத்தினர் மக்கெயினுக் கும் 37 சதவீதத்தினர் ஒபா மாவுக்கும் ஆதரவாக உள்ள னர். இவ்விரு புள்ளி விபரங் களும் வாக்காளர்கள் எவ் வாறு நிற அடிப்படையில் அணி திரண்டுள்ளனர் என்பதைத் தெரிவிக்கின் றன. வெள்ளை நிற வாக்கா ளர்களை வென்றெடுக்க வேண்டிய நிலையில் ஒபாமா உள்ளார்.
நிற அடிப்படையில் உறவுகள் மோசமாகவே உள்ளது என்று 60 சதவீத கறுப்பர்களும் 34 சதவீத வெள்ளையர்களும் நம்பு கின்றனர். இம்முறை ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என்று இரு நிறத்தவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மற்ற எந்தப் பிரச்சனையிலும் இரு தரப்பினரும் ஒன்று படவில்லை.
கறுப்பர்களின் பிரச்ச னைகள் மிகைப்படுத்தப் பட்டவை என்று வெள் ளையர்கள் கூறுகின்றனர். நிற அடிப்படையான தடை கள் குறித்து விரிவாக நட வடிக்கைகள் இல்லை என்று கறுப்பர்கள் கூறுகின்றனர். 2000ம் ஆண்டிலும், 2008ம் ஆண்டிலும் கறுப்பர்கள் சந்தித்துவரும் பிரச்சனை களில் மாற்றம் இல்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.