
தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் இன்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போராட்டம் நண்பகல் 12 மணியை தாண்டியும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என கேள்வியெழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட டெல்றொக்சனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தமது பிள்ளையின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியதோடு பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர்.