தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா சற்று முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவே கருணா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜே.என்.பி. ஆகிய கட்சிகள் மட்டுமே எதிர்க்கட்சி ஆசனத்தில் தற்போது அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.