Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணா டக்ளஸ் குழுக்களின் குற்றச் செயல்கள் : விக்கிலீக்ஸ் தகவல்கள்

17ம் திகதி மே மாதம் 2009 இல் பதிவு செய்யப்படுள்ள விக்கிலீக்ஸ் கேபிளில் கருணா மற்றும் டக்ளஸ் குழுக்கள் இராணுவம் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்துவருவதாகக் கோதாபய குறிப்பிட்டதாகச் அமரிக்க ராஜதந்திரத் தகவல்களைகளின் அடிப்படையில் குறிப்பிடுகிறது.

வடக்கில் இயங்குகின்ற தமிழ் இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தினரை தலையிட வேண்டாம் என, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே உத்தரவிட்டதாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, துணை இராணுவக் குழுக்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா குழுவினர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக உள்ள விநாயகமூர்தி முரளிதரன், இந்த ஆவணம் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version