Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாவுக்கு எதிராக கோவையில் இன்னா நாற்பது பேரணி.

சுமார் 15 லட்சம் தென்னை விவசாயிகள் தொடர்பான வாழ்வாதாரப் பிரச்சனை இது. தங்களுக்கு கள் இறக்குவதற்கான அனுமதி கோரி அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கோவையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டை ஒட்டி இக்கோரிக்கை எழ இப்போது வேண்டாம் மாநாடு முடிந்ததும் பேசுவோம் என்று சொன்ன கருணாநிதி அதன் பின்னர் தென்னை விவசாயிகளின் கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் இந்தப் போக்கிற்கு எதிராக இன்னா நாற்பது என்ற பெயரில் கள் இறக்க உரிமை கோரி தென்னை விவசாயிகள் கோவையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி,கடந்த 4 வருடமாக கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் தமிழக அரசு எங்களை அழைத்து செம்மொழி மாநாட்டுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருந்தது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று நாங்களும் போராட்டத்தை கைவிட்டோம். எங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு தேவையற்றது. கேரள அரசு மது விலக்கு குறித்து ஆராய ஒரு குழு நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி உதயபான தலைமையிலான அந்தக் குழு, கள் மது கிடையாது. கள் உணவின் ஒரு பகுதிதான் என்று அறிக்கை சமர்பித்தது. கேரள அரசு பிரதி மாதம் 1ஆம் தேதி மதுக்கடையை மூடுகிறது. ஆனால் கள்ளுக்கடையை மூட அறிவிக்கவில்லை. கேரள அரசிடம் உதயபானு குழு சமர்பித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் இனியவை நாற்பது என அலங்கார வாகனங்கள் ..சி. மைதானத்தில் இருந்து கொடிசியா வளகாம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் கள் இறக்க அனுமதிக்கக் கோரி, இன்னா நாற்பது என்ற பெயரில், கொடிசியா வளாத்தில் இருந்து ..சி. மைதானம் வரை 40 பதாகைகளில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Exit mobile version