தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக திரை உலகினருக்கு பல் வேறு சலுகைகளையும் வாரி வழங்கிவருகிறார். கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வருவதும், விவ்சாயம், பின்னலாடை, உள்ளிட்ட பல் வேறு தொழில் துறையும் தனியார் மயம் காரணமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சினிமா நடிகர்கள் மட்டும் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார்கள். காரணம் கருணாநிதி அரசு மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கு வாரி வழங்கிவதுதான் காரணம். இந்நிலையில் ரஜினி, கமல் தலைமையில் கருணாநிதியை குஷிப்படுத்தும் வகையில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனை வைத்து பிரமாண்ட பாராட்டு விழாவை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னையில் நடத்துகிறார்கள். நடிகைகளின் குத்துப்பாட்டை கருணாநிதி பல மணிநேரம் அமர்ந்து ரசிக்கிறார். ரஜினி கருணாநிதியைப் புகழ்ந்து வாலி எழுதிய பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த நிகழ்வில் நடனமாட மறுத்த பிரபல தமிழ் நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா, ப்ரியாமணி ஆகியோருக்கு தமிழ் திரயுலகினர் சினிமாவில் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றூ மறுப்பு தெரிவித்துள்ளனர். தவிறவும் கருணாநிதியின் பேரன்கள் திடீர தயாரிப்பாளர்களாகவும், ஹீரோக்களாகவும் குதித்து ஒட்டு மொத்த கோடம்பாக்கத்தையே கபளீகரம் செய்யும் நிலையும் கோடம்பாகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ரஜினி, கமல் பொன்ற பணககர நடிகர்கள் கருணாநிதியின் பின்னால் அணி திரண்டிருக்கும் அதே வேளையில் இன்னமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சினிமாக் கனவுகளோடு வந்து அதில் வெற்றி பெற முடியாமல் ஏதோ ஒரு நடிகரின் கால்ஷீட்டிற்காக காலம் காலமாக தவம் கிடக்கும் அதே வேளையில் பிரபல நடிகர்கள் அனைவரையுமே வளைத்துப் போட்டு சினிமாவை தனது குடும்பக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.