செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ” “சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்ற கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அமைப்பு ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதை சாட்சியங்கள் கூறும் ” என்று எழுதியிருந்தார். இதில் அவர் பயன்படுத்திய சண்டாளர்கள் என்னும் சொல் சாதீய அடுக்குகளில் ஒடுக்குண்ட தாழ்த்தப்பட்ட மக்களை வசவோடு உயர்சாதியினர் விழிக்கும் சொல்லாகும். ஆக மொழியறிவுக்குப்பால் தட்டையான இந்து சாதி வெறி பொதுப்புத்தியின் வெளிப்படாகவே கருணாநிதியின் இந்த மொழிப் பிரயோகத்தைக் காண வேண்டும் என்கிற நிலையில், தமிழில் ஆந்த புலமை கொண்டவர் கருணாநிதி என்று செம்மொழி மாநாட்டில் பேசியுள்ளார். பேரா.சிவத்தம்பி. அவர் பேசியதாவது “உலகின் மூத்த மொழி களில் மதச்சார்பற்ற மொழி தமிழ் மட்டுமே என இலங் கைப் பேராசிரியர், மார்க் சிய அறிஞர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டார்.செம்மொழி மாநாட் டில் வாழ்த்துரை வழங்கிய அவர் பேசியது வருமாறு:-முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவ ரது காலத்தில் நடக்கும் இம் மாநாடு சிறப்பானது. தமி ழின் பெருமைகளை முற் றும் அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி, வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழி கள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது. இந்தியாவின் இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல் லாட்சியையும் பெற்ற ஓரே மொழி தமிழ் மொழி மட் டுமே. இத்தகு தமிழ் மொழி யின் பெருமை உலக மக்க ளுக்குத் தெரிய வேண்டும். உலகம் அறிய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை யில் இடம்பெற்றுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப் பட வேண்டும். அப்புத்தகம் எல்லா உலக மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் கருணாநிதி செய்ய வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே மொழி தமிழ். ஆத லால், இம்மொழியின் புக ழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.