என்கிற எந்த விபரமும் இல்லாத, இப்படியான ஒரு மொட்டைக் கடிதத்தின் மூலமாகவே காங்கிரஸ், திமுக எம்பிக்கள் குழு இலங்கைக்குச் செல்ல உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது கருணாநிதி அறிவித்துள்ள படி இக்குழுவினரின் பயணம் என்பது இந்திய அரசின் பயணம் எல்ல என்றும் அது அவரவர் கட்சிச் செலவிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதையும் தெரிய முடிகிறது.
அப்படியானால் டி.ஆர் பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகனைச் சந்தித்த போது, விரைவில் இந்திய அரசு இலங்கைக்குச் செல்லும் குழுவை அறிவிக்கும் என்று ஏன் திமுகவினர் செய்தி பரப்பினார்கள். அனைவருமே சென்றிருக்கிற குழு அரசுக் குழு என்று நினைத்துக் கொண்டிருக்கும் இப்போது எங்கள் சொந்த செலவில் செல்கிறோம் என்று தாந்தோன்றித்தனாமாக செய்தி வெளியிட்டுள்ள கருணாநிதிக்கு என்னதான் பிரச்சனை? அரசுக்குழுவினராக இவர்கள் செல்லாத போது தனிப்பட்ட முறையிலான பயணம் என்றால் எதற்காகச் சென்றார்கள்.
இந்தக் குழுவில் உள்ள அனைவரும் அரசியல் வாதிகள் மட்டுமல்ல மிகப்பெரிய தொழில் முதலைகள், டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமாக பிரமாண்டமான கப்பல் நிறூவனங்கள் உண்டு, கனிமொழிக்கு ஏராளமான நிறுவனங்கள், மலேஷியாவிலும்,பாங்காக்கிலும் உண்டு என்னும் போது முகாம் மக்களைச் சாட்டாக வைத்து தொழில் முதலீட்டுச் சலுகைகளைப் பெற இந்த தொழில் முதலாளிகள் சென்றிருக்கக் கூடாது என்பதற்கு என்ன? உத்திரவாதம்.
இக்குழுவினரின் பயணத்திற்கான கிழக்கு மாகாண விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் நடத்திய விவாதத்தில் மாணவர்கள் கடும் கொந்தளிப்புகளை இவர்கள் மீது காட்டியதாகவும், கனிமொழியும், திருமா உள்ளிட்ட தலைவர்கள் மௌனமாக இருந்ததாகவும். டி.ஆர் பாலு மாணவர்களிடம் பேசும் போது “உலகத் தமிழர்களின் தலைவர் கருணாநிதி அனைத்தையும் செய்வார்” என்று சொன்னதாகவும் தெரிகிறது. ஏண்டா நாய்களா? ஐம்பதாயிரம் மக்கள் கொலை செய்யபப்ட்டு, மூன்றூ லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு, அன்றாடம் பாலியல் வன்முறையும்,கொலையுமாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திடம் போய். உலகத் தமிழர்களின் தலைவர் கருணாநிதி என்று சர்ட்டிபிக்கேட் பிரிண்ட் பண்றியே உங்களுக்கெல்லாம் ஈவிரக்கமே கிடையாதா?
கருணாநிதிக்கு உலகெங்கிலும் ஒரு அதிருப்தி நிலவுகிறது. உலக்த் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் எப்படியாவது அதைச் சரிக்கட்டி உலக்த் தமிழர் பட்டத்தை வங்கிவிட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் நாடகம்தான் இந்த தமிழக எம்பிக்களின் இலங்கைப் பயணம். மாணவர்களுடம் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு. வெளியில் வந்த போதும் பல மாணவர்கள் இக்குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
மக்களின் துன்பத்தையும் கண்ணீரையும் காவிய நாடகமாக நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்பது காலத்தால் கழுவப்பட முடியாததாகும். இந்தப் பயணத்தில் கூட ராஜபட்சே கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் பெயரில் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றே இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதும் தெரிகிறது.
இதில் மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டியது இவர்கள் தமிழ் தேசீய கூட்டமைப்பினரைச் சந்தித்திருக்கிறார்கள். போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது மக்களையும், போராளிகளையும் காப்பாற்ற பல முறை கருணாநிதியை சந்திக்க வேண்டி சென்னையில் வந்து தவம் கிடந்தனர் தமிழ் தேசீய கூட்டமைப்பினர். அவர்களை கடைசி வரை கருணாநிதி தேவையான போது சந்திக்கவே இல்லை. என்பதோடு டக்ளஸ் தேவானந்தா போன்றோர். இந்திய பிரதமர் வரை சந்தித்துக் கொண்டிருந்த போது, சம்பந்தன் குழுவை போர் முடியும் வரை பிரதமர் சந்திக்க வில்லை, பிரதமரிடம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் படி கருணநிதியிடம் கெஞ்சிய போதும் கருணாநிதி உதவவில்லை.
போர் நடந்து அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போது இந்த உலக்த் தமிழர்களின் தலைவர் என்ன செய்தார் தெரியும்? கனிமொழிக்கும், அழகிரிக்கும், தயநிதி மாறனுக்கும் பதவி வேண்டி டில்லியில் தள்ளுவண்டியில் சென்று மண்டியிட்டுக் கிடந்தார். அப்படி தன்னுடைய ஆட்சியிலேயே ஐம்பதாயிரம் மக்களைக் கொலையை கண்மூடி துரோகம் செய்து சகித்துக் கொண்ட இந்த உலகத் தமிழர்களின் தலைவலிக்கு. இப்போது அதை சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் . ஆகவே நாடகம் மேல் நாடகம் ஆடுகிறார். அப்படியான நாடகத்தின் ஒரு 14 வது ரீல்தான் இப்போது இலங்கையில் தமிழக எம்பிக்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழு நீளப்படத்தின் இன்னும் பல பாகங்களை நீங்கள் அடுத்தடுத்து கண்டு களிக்கக் கூடும்.