Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதி அரசின் முடிவிற்கு எதிராக நளினி மேன் முறையீடு!

கருணாநிதி அரசின் முடிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளார். இத்தகவலை வேலூர் சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் இருந்து வரும் நளினி, ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் தன்னை முன்னர் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பு தர்மராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு மார்ச் 11ஆம் திகதி அன்று விசாரணைக்கு வந்தது.

நளினி விடுதலை தொடர்பாக சிறைக்கைதிகள் ஆலோசனைக் குழு தமிழக அரசிற்கு அளித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து அரசு வழக்கறிஞர் பி.எஸ். இராமன் நீதிபதிகளிடம் வழங்கினார்.

நளினி விடுதலை தொடர்பாக ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

இவ்வழக்கு ஒரு தனி மனிதன் வாழ்க்கை தொடர்பானது, ஆகவே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடிவு செய்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை இம் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன் நாள் விசாரணைக்கு வந்தது. நளினியை விடுவிக்க இயலாது என்று அறிவுரை குழு பரிந்துரை செய்துள்ளது. அறிவுரை குழுவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வழக்கறிஞர் புக ழேந்தி தமிழக அரசின் டிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக தெவித்துள்ளார்.

Exit mobile version