Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதியின் பாராளுமன்றத்தில் தமிழ் கோரிக்கை உண்மை நிலை இதுதான் . அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது.

சமீபகாலமாக கருணாநிதியின் குடும்பக் கட்சியான திமுக மேடைகளில் பாராளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலிக்கிறது. வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு முன்னர் ப்ராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை கேட்டுப் பெறுவதர்கான முயர்ச்சியில் திமுக இறங்கியுள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உள்ள பற்றின் காரணமாக இக்கோரிக்கை முன் வைக்கப்படுவதைப் போன்ற ஒரு தோற்றம் இருக்கும் ஆனால் உண்மையில் மத்திய உரம் மற்றும் இராசாயனத்துறை அமைச்சரும் க்ருணாநிதியின் மகனுமாக மு.க. அழகிரி பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதில்லை. காரணம் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கே ஆங்கிலம் தெரியாது என்பதோ தமிழ மட்டுமே தெரியாது என்பதோ பிழையானதோ, தவறானதோ இல்லை. ஆனால் தன் மகனுக்கு பிரச்சனை வருகிறது என்பதாலேயே திமுகவினரும் கருணாநிதியும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். என்பதோடு மிக நுண்மையாக ஒரு எடுத்துக்காட்டை சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வில் இருந்து எடுத்துக் காட்ட முடியும். புதுடில்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இந்திய ஆங்கில ஊடகங்களும், இந்தி ஊடகவியளார்களும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் ஒரு நிருபர் தமிழில் ஒரு கேள்வியைக் கேட்டார் ஆனால் அந்த நிருபரின் மீது எரிந்து விழுந்த மத்திய உள்துறை அமைச்சரும் வேட்டி கட்டிய தமிழருமான சிதம்பரம் இங்கே தமிழில் கேள்விகள் கேட்கக்கூடாது இங்கே இந்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆகவே உங்கள் கேள்வியை இந்தியிலோ ஆங்கிலத்திலோ கேளுங்கள் தமிழில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன் என்று கடைசி வரை அந்த நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஒரு வேளை அந்த நிருபருக்கு தமிழ் மட்டுமே தெரிந்திருக்கலாம். அல்லது நமது ஊர் வேட்டி கட்டிய தமிழரிடம் டில்லியில் வைத்து தமிழில் கேள்வி கேட்பதை அந்த நிருபர் பெருமையாகவும் நினைத்திருக்கலாம். அவரது ஆசை என்னவாக இருந்தாலும் அது சிதம்பரத்தால் நிராகரிக்கப் பட்டதோடு ஏனைய ஊடகவியலாளர்களின் மத்தியில் அந்த நிருபர் அவமானபப்டுத்தப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து சென்னையில் இச்சம்பவம் குறித்து கருணாநிதியிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி தமிழ் தெரியாத ஊடகவியலார்கள் மத்தியில் ஆங்கிலமும் இந்தியும் தெரிந்தவர்களுக்கு மத்தியில் தமிழில் கேள்வி கேட்டதால் நண்பர் சிதம்பரம் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்று கருணாநிதி பதிலளித்தார்.சிதம்பரத்தில் பதிலை புரிந்து கொண்ட கருணாநிதிக்கு தன் மகன் தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழ் கோரிக்கை தொடர்பான யதார்த்தம் புரியாதா? இந்திய பாராளுமன்றத்தில் மட்டும் என்ன எல்லா மாநிலத்துக்காரர்களும் தமிழ் படித்துக் கொண்டா பாராளுமன்றம் வருகிறார்கள். அல்லது கருணாநிதியின் மகன் என்பதாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்து சண்டியர் என்பதாலும் இவர் பேசுகிற தமிழ் வட நாட்டுக்காரகளுக்குப் புரிந்து விடப் போகிறதா? இந்திய பிராந்திய மொழிகள் எதுவாக இருந்தாலும் அது தமிழோ, இந்தியோ, மலையாளமோ, கன்னடமோ எதுவாக இருந்தாலும் அது இந்தியாவின் பொதுமொழியாக ஆக முடியாது ஆகவும் கூடாது. இந்தியர்களின் பொதுமொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும். தவிறவும் தமிழகத்தில் கருணாநிதி குழுவினர் துவக்கி வைத்த மொழித் துவேஷம். அவர்களின் குடும்ப, வாரிசு அரசியல் வளர்சிச்க்கும், பெரும் கோடீஸ்வரக் குடும்பமாக வள்ரவுமே பயன்பட்டிருக்கிறதே தவிற கருணாநிதி தமிழுக்கு எதுவும் செய்ததில்லை. தமிழர்களுக்கும் எதுவும் செய்ததில்லை. செம்மொழி மாநாடு என்பது உலகெங்கிலும் தன் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை சரி செய்யும் முயர்ச்சியே அன்றி வெறுதும் இல்லை.மத்திய அமைச்சராக அழகிரி பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அவர் நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்ததில்லை. திமுகவின் எத்தனையோ மூத்த அறிவாளிகள் திருச்சி சிவா மாதிரியான ஆட்கள் இருந்தும். அவர்களுக்கு மிகச் சிறந்த ஆங்கில அறிவு இருந்தும் அவர்களை ம்த்திய அமைச்சர் ஆக்காத கருணாநிதி. தனது மகன். ,மகள், பேரன் என வாரிசுகளுக்கு மட்டுமே பதிவியை வழங்கி வருகிறார். கருணாநிதியின் இந்த போலித் தமிழ் பற்ரில் இனியும் தமிழர்கள் ஏமாறக் கூடாது.

Exit mobile version