Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதியின் டெசோ மாநாட்டின் பின்னணியில் இந்திய உளவுத்துறை?

தமிழ் நாடு முன்னை நாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஒன்றுக்கூட்டும் தமிழீழ ஆதரவாளர் மாநாட்டின் பின்புலத்தில் இந்திய உளவுத்துறை ரோ(RAW) செயற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கருத்து நிலவுகிறது. வன்னிப் படுகொலையின் போது இலங்கை அரசோடு இணைந்து செயற்பட்டு தனது அதிகாரவர்க்க விசுவாசத்தைக் காட்டிக்கொண்ட கருணாநிதி, தமிழின விரோதியாகவே கடந்தகாலத்தில் செயற்பட்டார். இதன் பின்னர்தமிழ் நாட்டில் இனவாத பாசிசக் கருத்துக்களோடு கட்சிகள் உருவாகின.
புலம் பெயர் நாடுகளில் வாழும் இனவாதிகள் இக்கருத்துக்களால் ஈர்க்கபட்டனர். இப்போது கருணாநிதி புதிதாக முளைவிடுவதை யாரும் நம்பத் தயாரில்லாத நிலையில், புலம்பெயர் இனவாத வியாபாரிகள் பலர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version