
இந்தியாவின் பல மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே நீதிமன்றங்களில் வாதாடுவது போல தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழையே வழக்காடு மொழியாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுக்க வழக்கறிஞர்கள் போராடு வருகிறார்கள். தமிழுக்கும் தமிழர்க்கும் எல்லா சாதனைகளையும் தான் செய்து முடித்து ஓய்ந்து விட்ட காரணத்தால் யாரும் தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரக்கூடாது என்பது கருணாநிதியின் விருப்பம். இந்த விருப்பத்தை முதலில் வெளிப்படையாகத் தெரிவித்தார். பின்னர் திமுக வழக்கறிஞர்களையும் ரௌடிகளையும் ஏவி கலைக்கப் பார்த்தார். போலீசையும் தூண்டி விட்டார் கோவையில் மட்டும் போராட்டத்தை சீர்குலைக்க முடிந்ததே தவிற மதுரையில் வழக்கறிஞர்களை நெருங்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் கூடுதலாக இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலைச் சந்தித்த திமுக அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களைச் சரிக்கட்டுமாறு கூறினார். இக்பால் வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினார். ஆனால் வழக்கறிஞர்களோ “செம்மொழி மாநாடு நடப்பதால் நாம் போராட வில்லை. சென்ற வருடமோ போராடினோம் அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியே கிடக்க இந்த நேரத்திலாவது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி விட வேண்டும் என்பதால் போராடுகிறோம். ஆகவே போராட்டத்தைக் கைவிட முடியாது ” என்று கூறி விட்டதால். இன்று நீதிமன்றப் புறக்கணிப்பு துவங்கியுள்ளது.