ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியது:
“ஐ.நா. சபையின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளன. இத்தனை அதிகாரம் உள்ள ஐ.நா.வினால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் அங்கு மிச்சம் உள்ள போராளிகளை அழிக்கப் போகிறார்கள்.
விடுதலைக்குப் போராடிய எந்த இனமும் அழிந்ததாக வரலாறு இல்லை. வெற்றி பெற்றதாகத்தான் வரலாறு உள்ளது.
உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் உசுப்பி விடப்பட்டிருக்கிறார்கள். வெற்றி பெறும் வரை இனி ஓயமாட்டோம். இலங்கையில் தனி ஈழம் தவிர எதுவும் தீர்வாகாது.
செங்கல்பட்டில் எட்டு நாள்களாக உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுக்காவது தமிழக அரசு கருணை காட்ட வேண்டும். இதைத் தவிர நாங்கள் எதுவும் கேட்கவில்லை.
இலங்கைத் தமிழர் விடுதலை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எதுவும் கேட்க மாட்டோம் என முடிவு செய்துவிட்டோம்; ஏனென்றால் கேட்டாலும் எந்தவிதப் பயனும் இல்லை என்பதால்தான்’ என்றார் ராமதாஸ்.