பாகிஸ்தான் ஜின்னா ஏர்போர்டில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகியுள்ளனர். கராச்சி நகரின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜின்னா ஏர்போட்டில் நுளைந்த 10 ஆயுதம் தாங்கிவர்கள் மும்பை பாணியில் சாரமரியாக மக்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். கனரகத் துப்பாக்கிகள், ரொக்கட் லாஞ்சர்ஸ், கைக்குண்டுகள், தற்கொலை உடையணிகள் போன்றவை அவர்களிடமிருந்தது. ஆயுத்தாரிகள் 10 பேரையும் சுட்டுக்கொலை செய்ததாக போலிஸ்தரப்பு அறிவிக்கிறது.
நள்ளிரவில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடையணிந்து நுழைந்த தீவிரவாதிகள் சண்டை இன்று காலை 8.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. 10 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஏர்போர்ட் முழுமையும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்தாகவும் ராணுவம் தெரிவித்தது.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம்தேதி மும்பை ரயில் நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலை ஒத்த இத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தெளிவாகவில்லை. ஆறு மணி நேரங்கள் விமான நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஆயுதம் தாங்கியவர்கள் பல சந்தர்ப்பங்கள் அதிகாரவர்க்கத்தின் தீய நோக்கங்களின் பலிகடாக்களாகின்றனர். அரச உளவுத்துறைகளே இவ்வாறான தாக்குதல்களைத் திட்டமிட்டு உணர்ச்சிவசப்படுத்தப்பட்ட இளைஞர்களைப் இரத்தப்பலி கொடுப்பது வழமையாகிவிட்டது.
இந்த தாக்குதலில் விமானம் ஏதும் சேதமடையவில்லை என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும் இன்று மாலை வரையில் கராச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் தரயிறங்கிய விமானம் ஒன்றைக் கடத்திச் செல்வதே ஆயுததாரிகளின் நோக்கமாகவிருந்தது எனவும், அது முறையடிக்கப்பட்டதும் விரக்தியடைந்தவர்கள் விமான இறங்கு துறையைத் தாக்கியதாகவும் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.
இறுதிச் செய்திகளின்படி, கராச்சி சர்வேதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் படுகாயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.