பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் இரண்டும் ஜெயலலிதா கட்சியுடன் தமது பதவிப் பேரத்தை முடிக்கும் தறுவாயிலுள்ளன.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தான் போட்டியிட உள்ள 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டது.
நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், தளி, சிவகங்கை, பவானிசாகர், அம்பாசமுத்திரம், வால்பாறை, ஆலங்குடி ஆகிய பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 தொகுதிகள் எவை என்பது இன்னும் வெளியிடவில்லை. விரைவில் அந்த கட்சி வெளியிடும் என்று தெரிகிறது.