Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கமல் பிணையில் விடுவிக்கப்பட்டால் எமக்குப் பாதுகாப்பில்லை : ரெக்சியன் குடும்பம்

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஊர்காவற்றுறை நீதிமன்நில் ஆஜர் படுத்தப்பட்டார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதே வேளை, நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் ரெக்சியன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டால் தமது உயிருக்கு ஏற்படும் என ரெக்சியனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலைகாரர்களும் லும்பன்களும் மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் இராணுவப் பிரதேசத்தில் சாமானியர்களின் உயிருக்கு குறைந்தபட்சப் பாதுகாப்பும் இல்லை என்பதை இச் ரெக்சியனின் குடும்பத்தின் நிலைப்பாடு மக்களுக்குக் கூறுகிறது.
ஈ.பி.டி.பி கட்சியின் நீண்டகால உறுப்பினரான கமலின் அடியாட்கள் ரெக்சியனின் குடும்பத்தை மிரட்டிவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Exit mobile version