Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கனிமொழி மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது – நீதிமன்றத்தின் நியாயம்

2G அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக் காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி தண்டனைக்குரியவர் என்பதில் மாற்றுக் கருத்தற்றவர்கள் கூட அலைக்கற்றை ஊழலில் நிகர லாபம் பெற்றுக்கொண்ட இந்தியப் பெரு முதலாளிகள் சுதந்திரமாக உலாவருகின்றனட் என்பது குறித்துக் கேள்வியெழுப்புகின்றனர். இந்தியப் பெரு முதலாளிகளின் நலனுக்காக இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. இந்தியாவில் பழங்குடி மக்கள் துவம்சம் செய்யப்படுகின்றனர். அவர்களின் ஊழலுக்குத் துணைபோன கனிமொழி காட்டிக்கொடுக்கப்பட்டு சிறையில் அடைகப்பட ஊழலின் சூத்திரதாரிகள் நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
கனிமொழிக்கு ஜாமீனை நிரகரித்தமை குறித்து விளக்கமளித்திருக்கும் நீதிமன்றம் ஊழலின் மூல கர்த்தாக்கள் சுதந்திரமாக உலாவுவது குறித்து இன்னும் விளக்கம் ஏதும் கூறவில்லை.

Exit mobile version