
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஐந்து தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட டில்லி உயர்நீதிமன்றம் நாளையே அவரது ஜாமீன் மனுவை விசாரிக்கிறது. ஏற்கனவே ஐந்து முறை அவரது ஜாமீன் மனுவை பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் நிராகரித்து விட்ட நிலையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் டிசம்பர் 1 ஆம் தேதி அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றிருந்தது. அந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தனி மனுத் தாக்கல் செய்திருந்தார் கனிமொழி அதை டில்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதால் நளையே அவரது மனு விசாரணைக்கு வருகிறது.