09.10.2008.
அமெரிக்காவில் பங் குச்சந்தைகளில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியால், ஒரே நாள் இரவில், பெரும் பணக்காரரான அமெ ரிக்க வாழ் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த தொழி லதிபர் கார்த்திக் ராஜா ராம் வீதிக்கு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் ஆகியோரை சுட் டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண் டார். இச்சம்பவம் அமெ ரிக்காவையே உலுக்கி யுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகா ணத்தில் போர்ட்டர் ராஞ்ச் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜாராம் (45). இவர் லண் டனைச் சேர்ந்த கம்பெனி ஒன்றில் அமெரிக்க கிளை யில் 1.2 மில்லியன் டாலர் அளவிற்கு பெருமளவில் முதலீடு செய்திருந்தார். அமெரிக்க பங்குச் சந்தை யில் ஊக வணிகத்தின் விளைவாக ஏற்பட்ட கடு மையான வீழ்ச்சியும், அமெ ரிக்க நிதித்துறையில் ஏற் பட்ட மிகக் கடுமையான சரிவும் கார்த்திக் ராஜா ராமைப் போன்ற பெரும் பணக்காரர்களை ஒரே நாளில் வீதியில் தூக்கி யெறிந்தது. பெரும் தொழி லதிபராக இருந்த கார்த்திக் ராஜாராம், ஒரு வேலை யில்லா இளைஞராக மாறி னார். இதனால் அவர் விரக்தியடைந்தார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், வாழ்வதற்கு வழியின்றி விழி பிதுங்கி நின்றார்.
இந்நிலையில், போர்ட் டர் ராஞ்ச்சில் உள்ள அவ ரது இல்லத்தில் கார்த்திக் ராஜாராம். அவரது மனைவி சுபஸ்ரீ (39), அவரது மகன் கள் கிருஷ்ணா (19), கணேசா (12), அர்ஜூனா (7) மற்றும் அவரது மாமியார் (வயது 70) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
பங்குச் சந்தை வீழ்ச்சி யால் தனது ஒட்டுமொத்த சொத்துக்களும் சூறை போய் விட்டதை அறிந்த ராஜாராம், தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட் டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்து கொண் டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ராஜாராம், துப்பாக்கி ஒரு வாங்கினார் என்றும், இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் இரண்டு தற் கொலை குறிப்புகளை எழுதி வைத்து விட்டு பலி யாகியுள்ளார் என்றும் அந்த ஏடு தெரிவிக்கிறது. போலீ சாருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், கடுமையான பொருளாதார நெருக்க டியே தனது இந்த முடிவுக் குக் காரணம் என்று குறிப் பிட்டுள்ளார். மற்றொரு கடிதத்தை தனது நண்பர் களுக்கு விட்டுச் சென் றுள்ளார்.
தகவல் அறிந்து ராஜா ராம் மற்றும் 5 பேரின் உடல் களை கைப்பற்றிய போலீ சார் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போட்டுள்ள னர். தீவிர விசாரணையி லும் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர் கடந்த சில வாரங்களா கவே கார்த்திக் ராஜாராம் கடும் நெருக்கடியில் தவித்து வந்தார் என்று தெரிகிறது என கூறினார்.