Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

“ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ‘கத்தி’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போது செய்திகள் வெளியாகின.

செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று ‘கத்தி’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘லைக்கா’ நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் இப்பிரச்சினையை முடிவு கொண்டுவர தீர்மானித்து இருக்கிறாராம்.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஆதாரங்களோடு, இலங்கைத் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து பேச தீர்மானித்திருக்கிறார். இதன் மூலம் இப்படப்பிரச்சினை முடிவு வரும் என்று நினைத்திருக்கிறார்.”

தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் இந்து நாழிதழின் இணையப் பதிப்பு இச் செய்தியை வெளியிட்டுள்ளது. எண்பதுகளின் இறுதிவரைக்கும் வரைக்கும் ஈழத்துக் கலைகளும் எழுத்துக்களுமே தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தன. இவை அழித்துச் சிதைக்கப்பட பாலியல் வக்கிரங்களும், வன்முறையும் நிறைந்த தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சிக் கலாச்சாரம் காரணமாயிருந்தது. பெறுமதிமிக்க சமூக உணர்வுள்ள தென்னிந்தியப் படைப்புக்கள் கூட வலுவிழந்து போயின. 2009 ஆம் ஆண்டு இனவழிப்பின் பின்னர் இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பு அபிவிருத்தி, களியாட்டங்கள் என்ற தலையங்கத்தில் தீவிரமடைய ஆரம்பித்தன.

புலம்பெயர் நாடுகளில் லைக்கா மற்றும் லெபாரா போன்ற பல்தேசிய வியாபார நிறுவனங்கள் குத்தாட்டங்களுக்கும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் பணத்தை வாரியிறைத்தன. ஊடகத் துறைக்குள்ளும் இந்த நிறுவனங்கள் மூக்கை நுளைத்துக்கொண்டன. தென்னிந்தியத் தொலைக்காட்சிகளான விஜய், சண், ஜெயா, ராஜ் போன்ற நிறுவனங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஊடுருவி மூளைச் சலவை செய்ய ஆரம்பித்தன.

புலம்பெயர் நாடுகளில் லைக்கா மற்றும் லெபாரா போன்ற பல்தேசிய வியாபார நிறுவனங்கள் குத்தாட்டங்களுக்கும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் பணத்தை வாரியிறைத்தன. ஊடகத் துறைக்குள்ளும் இந்த நிறுவனங்கள் மூக்கை நுளைத்துக்கொண்டன. தென்னிந்தியத் தொலைக்காட்சிகளான விஜய், சண், ஜெயா, ராஜ் போன்ற நிறுவனங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஊடுருவி மூளைச் சலவை செய்ய ஆரம்பித்தன.

லைக்கா இலங்கை அரசோடு வியாபாரம் செய்யும் நிறுவனம் என்பதை அதன் உரிமையாளர் சொல்லாமலே தெரிந்துகொள்ள பல ஆதாரங்கள் உள்ளன. இங்கு சிக்கல் லைக்கா மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்வியல் அவலங்களை அழித்து வியாபார வெறிக்குள் ஊடகங்களையும் கலையையும் பண்பாட்டையும் உள்வாங்குதலே.

இதற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளமை ஆரோக்கியமான சமூகச் சூழலே.

தவிர லைக்காவின் இலங்கை அரச வியாபாரம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.அதுவும் அப்பாவி இலங்கை மக்களின் பணத்தைச் சூறையாடும் இந்த நிறுவனத்தின் பணவெறிய இவற்றில் காணலாம்.

ஆதாரங்கள்:

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்

இந்து வெளியிட்டுள்ள செய்தி:

‘கத்தி’ பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கும் தயாரிப்பாளர்
Exit mobile version