நூறு மில்லியன் டொலர்கள் அப்பாவி மக்களின் ஊழல் பணத்தை ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து சுருட்டிக்கொண்ட லைக்கா நிறுவனம், தென்னிந்திய சினிமாவை புலம்பெயர் மக்கள் மத்தியில் 90 களிலிருந்து அறிமுகப்படுத்திய சினிமா வியாபாரிகளான ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்த கத்தி திரைப்படம் புலம் பெயர் நாடுகளின் திரையரங்குகளில் காண்பிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இனக்கொலை அரசுடன் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கும் லைக்கா நிறுவனம் புலம் பெயர் நாடுகளில் இளைஞர் அமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், அரசியல் கட்சிகள், இணைய சஞ்சிகைகள் ஆகியவற்றை பணபலத்தால் கட்டுப்படுத்தி வருகின்றது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்களும் அதன் தலைமைகளும் லைக்காவின் பணத்தால் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
லைக்காவின் கத்தி திரைப்படத்திற்கு எதிரான சர்ச்சையில் கைதான மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக பிரித்தானிய தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது. லைக்காவிற்கும் சமூகத்தின் மீதான் அதன் வன்முறைக்கும் எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூட இந்த அமைப்புக்கள் தயங்கும் நிலயில் கைதான மாணவர்களுக்கு ஆதரவான இவர்கள் நடத்தும் வெற்றுப் போராட்டம் வலுவற்றைது.
இந்த நிலையில் லைக்காவிற்கு எதிராக சினிமா அரங்குகளின் முன்னால் திடீர்ப் போராட்டங்களை நடத்தபோவதாக சமூகப் பற்றுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.