Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கட்டாய குடும்பக் கட்டுப்பாடு : மலையகத்திலும் இனச் சுத்திகரிப்பு

மலையகத்தின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் இரண்டு பிள்ளைகளை பெற்ற பெண்கள் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் அங்கு மக்கட்தொகை வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர் பெரியசாமி முத்துலிங்கம் சுட்டிக்காட்டுகிறார்.

தோட்டங்களில் தொழில்புரியும் பெண்களிடம், அவர்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் வாழ்க்கை பிரச்சினைகளை காரணம் காட்டி அவர்களை சம்மதிக்கவைத்து நிரந்தர கர்ப்பத்தடைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

இங்கு பெண்களின் சம்மதம் பெறப்பட்டாலும், மற்ற சமூகங்களில் இல்லாத அளவுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு பணியாளர்களின் செயற்பாடுகள் மலையக தோட்டங்களில் அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

மலையக சமூகத்தை மையப்படுத்திய இப்படியான செயற்பாடுகள் தான் அந்த சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறையக்காரணம் என்று தெரியவந்திருப்பதாக முத்துலிங்கம் குறிப்பிட்டார்.

இந்த நூற்றாண்டிலும் அடிமைகள் போன்று நடத்தப்படும் மலையகத் தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக கட்டாய குடும்பக்கட்டுப்பாடு கருதப்பட வேண்டும்.

Exit mobile version