ராஜபக்ச பாசிச அரசு இலங்கையை இராணுவ சிந்தனைக்கு உட்படுத்தும் திட்டதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மற்றொரு பகுதியாக இலங்கை முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கத் தீர்மானித்துள்ளது. வன்னிப் போருக்காகப் புதிதாக இணைக்கப்பட்ட இராணுவத்தினருக்கே மாதாந்த ஊதியத் தொகை வழங்காத நிலையில் பல்கலைக்கழக மாணவர்களையும் இராணுவ முறைமைக்குள் உட்படுத்துகிறது. இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்குரல்களும் எழுந்த நிலையில் இலங்கைப் பேரினவாத அரசு இவை எதனையும் பொருட்படுத்தவில்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கும் ஆரம்பகட்ட நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த மாணவர்களில் பலர் பலவந்தமாக அழைத்துவரப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.