பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெற்று தொழிற்கட்சிக்கு கொடுத்து அதனூடாக தமது உள்ளூர்அரசியலை மேம்படுத்துவதற்காக மட்டுமே இவர்கள் 2009 நடுப்பகுதியில் பாராளுமன்றசதுக்கத்தில்கூடிய மக்களின் எண்ணிக்கையை பயன்படுத்தினார்கள்.
ஈழத்தமிழினத்தின் உயிர்மூச்சு குரூரமான இனப்படுகொலைக்கூடாக மண்போட்டு மூடப் பட்ட அந்த நாட்களில் பிரித்தானிய தொழிற்கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இளையோரால் முன்னெடுக்கப்பட்டு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த பாராளுமன்றசதுக்க போராட்டத்தினாலும், சாகும் வரையான உண்ணாவிரதத்தாலும் எழுந்த அரசியல்பேச்சுவாhத்தைகளைக்கூட டேவிட்மிலிபாண்டுக்கு நன்றி சொல்லும் சம்பிரதாயமான சந்திப்பாகவே முடித்த அவர்கள் எப்படி தமிழர்களுக்காக இனியும் நேர்மையுடன் பிரித்தானியஅரசியலில் பேசுவார்கள் என்று நாம் நம்புவது?
இளைஞர்களை சந்திப்பதற்கு அப்போதைய பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபாண்ட் அழைப்புவிடுத்தபோது அதனை தடுப்பதற்கு திரைமறைவு வேலை செய்தவர்கள்தான் இந்த ராசதந்தர ‘அறிவாளிகள்’.
சந்திப்பு நடப்பதை தங்களால் தடுக்கமுடியாது என்று தெரிந்தவுடன் டேவிட் மிலிபாண்டை சந்திக்க சென்ற இளையோருக்கு வாசலில் வைத்து ‘விடுதலைப்புலிகளின் தடையை நீக்கும்படி கோர வேண்டாம்’ என்று அறிவுரைகூறிய பெரிய மனிதர்கள்தான் இப்போது தாங்களே பிரித்தானிய தமிழர்களுக்கு தலைமை என்று வருகிறார்கள்.
தமிழர்கள் தங்களுடன் நிற்கிறார்கள் என்று இவர்கள் காட்டுவது அடுத்த தேர்தலில் தொழிற்கட்சிவேட்பாளராகவும், சிறுசிறு எலும்புத் துண்டுகளுக்காவும்தான். ராகுல்காந்தியை சந்திக்கவும் அவருடனான சந்திப்பில் ராகுல் காட்டிய பரிவுக்காக புல்லரித்து போகவும்தான் இவர்களால் முடியும்.
பிரித்தானியாவில் மக்கள்முன்வரும் எந்தவொரு அமைப்பிலும் இந்த மாயமனிதர்களின் முகங்கள் காணப்பட்டால் அந்த அமைப்பில் இருந்து இவர்களை நீக்கிவிட்டுவரும்படி கோருவதன் மூலமே இவர்களை ஓரந்தள்ள முடியும்.
‘சொந்த சகோதரங்கள் துன்பத்தில் வாடும்போதும், தாய்மாரும் குழந்தைகளும் தீயில் கருகியபோதும் தமது கட்சிக்கான அரசியலையே நடாத்திய இவர்களை இவர்களின் மனச்சாட்சியே ஒருநாளில் குத்திக்காட்டும்’
http://www.sangathie.com/news/16177/58//d,fullart.aspx