Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து கருணா நீக்கம்?

25.10.2008.

கிழக்கு மாகாணத்துக்குப் பொலிஸ் அதிகாரம் தேவையில்லையெனக் கருணா அண்மையில் கூறிய கருத்துத் தொடர்பாகவே அவர் கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் பதவியில் நந்தகோபன் நீடிப்பார் எனவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைவராக கருணா  நீடிப்பார் எனவும் ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்துக்கான பொலிஸ் அதிகாரம் குறித்து கருணா  அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துத் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அவரிடம் விளக்கம் கோரியிருந்தது.
எனினும், கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக வெளியான கருத்தை கருணா  தரப்பு மறுத்துள்ளது.

 

Exit mobile version